Published : 03 Jul 2025 06:37 AM
Last Updated : 03 Jul 2025 06:37 AM

கல்பாக்கம் | பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை: விசிக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

கல்பாக்கம்: கூவத்​தூரை அடுத்த காத்​தான் கடை பகு​தி​யில் பெட்​ரோல் பங்க் உரிமை​யாளரை கடந்த ஜூன் 30-ம் தேதி நள்​ளிர​வில் வெட்டி கொலை செய்த சம்​பவத்​தில் 3 பேரை கைது செய்த போலீ​ஸார், தலைமறை​வாக உள்ள 5 பேரைத் தேடி வரு​கின்​றனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், கல்​பாக்​கத்தை அடுத்த கூவத்​தூர் பேட்டை பகு​தியை சேர்ந்த மோகன்​ராஜ்.

காத்​தான் கடை பகு​தி​யில் பெட்​ரோல் பங்க் நடத்தி வந்​தார். இந்​நிலை​யில், கடந்த ஜூன் 30-ம் தேதி நள்​ளிரவு பெட்​ரோல் பங்க்கை மூடி​விட்டு வீட்​டுக்கு சென்​ற​போது, மர்ம நபர்​கள் சிலர் அவரை வழிமறித்​து, கத்​தி​யால் வெட்டி விட்டு அங்​கிருந்து சென்​ற​தாக கூறப்​படு​கிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக, கூவத்​தூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தனிப்​படை அமைத்து கொலை​யாளி​களை தேடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மேற்​கண்ட சம்​பவத்​தில் தொடர்​புடைய​தாக கூவத்​தூர் பேட்டை பகு​தியை சேர்ந்த ரகு (33), தட்​சிணா​மூர்த்தி (33), ரவீந்​திரன் (24) ஆகியோரைக் கைது செய்​து, திருக்​கழுகுன்​றம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி புழல் சிறை​யில் அடைத்​தனர். மேலும், இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய​தாக 5 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

இதுகுறித்​து, போலீ​ஸார் கூறிய​தாவது: சம்​பவம் தொடர்​பாக கைது செய்​யப்​பட்​டுள்ள ரகு, விசிக கட்​சி​யில் மாவட்ட பொறுப்​பில் உள்​ளார். இவர், கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு மோகன்​ராஜின் பெட்​ரோல் பங்க்​கில் காருக்கு பெட்​ரோல் போட்​ட​தாக​வும். அதற்கு பணம் வழங்​காமல் வாக்​கு​வாதம் செய்​த​தாக​வும் தெரி​கிறது.

இதுதொடர்​பான, சிசிடிவி காட்​சிகளை பெட்​ரோல் பங்க் உரிமை​யாளர் சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டுள்​ளார். இதனால், கட்​சி​யின் தலை​மை இவரை கண்​டித்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், ஆத்​திரமடைந்த ரகு பெட்​ரோல் பங்க் உரிமை​யாளரை வெட்டி கொலை செய்​த​தாக தெரி​கிறது. இதுதொடர்​பாக விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x