Published : 02 Jul 2025 06:10 AM
Last Updated : 02 Jul 2025 06:10 AM

சென்னை: மயக்க ஊசி செலுத்தி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்? - எஸ்.ஐ. மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு

சென்னை: மயக்க ஊசி செலுத்தி சிறுமி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டில் போலீஸ் எஸ்.ஐ. மீது போக்சோ பிரி​வின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை நுங்​கம்​பாக்​கம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒரு​வர் அதே பகு​தி​யில் உள்ள பள்ளி ஒன்​றில் 3-ம் வகுப்பு படித்து வரு​கிறார். சிறுமிக்கு தாயார் இல்​லை.

தந்தை​யும், தாத்​தா​வும் வளர்த்து வரு​கின்​றனர். இந்​தச் சிறுமி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை மாலை தனது வீட்​டின் முன்பு விளையாடிக் கொண்​டிருந்​த​போது, திடீரென்று மாய​மா​னார். இந்​நிலை​யில், நுங்​கம்​பாக்​கம் லேக்​-ஏரியா பகு​தி​யில் உள்ள ஆயுதப்​படை போலீஸ் எஸ்.ஐ ராஜூ என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சிறுமி மயங்​கிய நிலை​யில் கிடந்​ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்​தை​யும், தாத்​தா​வும், சிறுமியை உடனடி​யாக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அந்த வீட்​டில் இருந்​தவர்​களிடம் சிறுமி​யின் இந்த நிலை குறித்து தாத்​தா​வும், தந்​தை​யும் கேட்​ட​போது, இரு​வரை​யும் சரமாரி​யாகத் தாக்கி விரட்டி விட்​டுள்​ளனர். இதற்​கிடையே, தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக சிகிச்சை அளித்த மருத்​து​வர்​களிடம் அந்​தச் சிறுமி தெரி​வித்​துள்​ளார்.

இதைத்​தொடர்ந்​து, சம்​பந்​தப்​பட்ட போலீஸ் எஸ்.ஐ ராஜூ மீது நுங்​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுக்​கப்​பட்​டது. மேலும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத்​தடுப்பு பிரிவு துணை ஆணை​யர் வனிதா நேரடி விசா​ரணை​யில் இறங்​கி​னார். குழந்​தைகள் நல அதி​காரி​களும் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில் எஸ்.ஐ ராஜூ மீது போக்சோ சட்​டப்​பிரி​வின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு அவரிடம் தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. விசா​ரணை முடி​வில் அவர் கைது செய்​யப்​படலாம் என்று கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, அத்​து​மீறி நடந்​து​கொண்​ட​தாக எஸ்.ஐ மனைவி கொடுத்த புகார் அடிப்​படை​யில், சிறுமி​யின் தந்தை மீது நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் தனி​யாக ஒரு வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x