Published : 02 Jul 2025 12:34 AM
Last Updated : 02 Jul 2025 12:34 AM

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி கைது: தமிழக காவல்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்​பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டு​கள் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோரை காவல் ​துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய போலீஸ் பக்​ருதீன் கடந்த 2013-ம் ஆண்டு சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டார். தொடர்ந்​து, கூட்​டாளி​களான பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்​திர மாநிலம் புத்​தூரில் இரு​மாநில காவல்​துறை​யினர் மேற்​கொண்ட ஆபரேஷனில் சிக்​கினர். இவர்​களு​டன் தொடர்​புடைய அபுபக்​கர் சித்​திக்கை காவல்​துறை​யினர் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், தற்​போது அபுபக்​கர் சித்​திக் மற்​றும் திருநெல்​வேலி முகமது அலி ஆகியோர் காவல்​துறை​யினரிடம் பிடிபட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக தமிழக காவல்​துறை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 1995 முதல் நடை​பெற்ற பல்​வேறு வெடிகுண்டு சம்​பவங்​கள் மற்​றும் மதரீ​தி​யான கொலைகளுக்​குத் திட்​டம் தீட்டி தீவிர​வாதச் செயல் புரிந்து தலைமறை​வாக இருந்த நாகூர் அபுபக்​கர் சித்​திக் மற்​றும் திருநெல்​வேலி முகமது அலி ஆகியோர், தனிப்​படை​யின​ரால் ஆந்​திர மாநிலம் அன்​னமையா மாவட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த 1995-ல் சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை இந்து முன்​னணி அலு​வலக குண்​டு​வெடிப்பு வழக்​கு, நாகூர் தங்​கம் முத்​துக்​கிருஷ்ணன் வீட்​டில் பார்​சல் குண்​டு​வெடிப்பு வழக்​கு, 1999-ல் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் உட்பட 7 இடங்​களில் (சென்​னை, திருச்​சி, கோவை, கேரளா) குண்​டு​கள் வைத்த வழக்​கு, 2011-ல் மதுரை திரு​மங்​கலம் அத்​வானி ரதயாத்​திரை​யின்​போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்​கு, 2012-ல் வேலூர் மருத்​து​வர் அரவிந்த்​ரெட்டி கொலை வழக்கு மற்​றும் 2013-ல் பெங்​களூரு பாஜக அலு​வல​கம் அருகே குண்டு வெடித்த வழக்​கு​களில் முக்​கியப் பங்​காற்​றிய அபுபக்​கர் சித்​திக் கடந்த 30 ஆண்​டு​ களாக தலைமறை​வாக இருந்​தார். இந்​நிலை​யில் அவரை தமிழக காவல்​துறை​யின் தனிப்​படை போலீ​ஸார் ஆந்​தி​ரா​வில் கைது செய்​தனர்.

அதே​போல், 1999-ல் தமிழகம் மற்​றும் கேரளா​வில் 7 இடங்​களில் வெடிகுண்​டு​கள் வைத்த வழக்​கில் 26 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த குற்​ற​வாளி​யான திருநெல்​வேலி மேலப்​பாளை​யத்​தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்​சூரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இதையடுத்​து, சென்னை நீதி​மன்​றம் பிறப்​பித்த பிடி​யாணை அடிப்​படை​யில், இரு​வரும் தீவிர​வாத தடுப்​புப் படை​யின​ரால் நீதி​மன்ற காவலுக்கு இன்று (நேற்​று) உட்​படுத்​தப்​பட்​டனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x