Published : 23 Jun 2025 06:09 AM
Last Updated : 23 Jun 2025 06:09 AM

ஒன்றரை ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தங்கை கணவரை கொலை செய்த மைத்துனர்கள் 3 பேர் கைது

சென்னை: ​காதல் மனை​வி​யுடன் வாழாமல் ஒன்​றரை ஆண்​டாக பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞர் கொலை செய்​யப்​பட்​டார். இக்​கொலை தொடர்​பாக மனை​வி​யின் சகோ​தரர்​கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை மேற்கு மாம்​பலம், எல்​ஐஜி பிளாட்ஸ் பகு​தி​யில் வசித்து வந்​தவர் கலை​யரசன் (23).

கூரியர் நிறு​வனம் ஒன்​றில் டெலிவரி செய்​யும் வேலை செய்து வந்​தார். இவர் கடந்த 15-ம் தேதி அதி​காலை அசோக் நகர்,35-வது தெரு​வில் நின்​றிருந்​தார்.அப்​போது, அங்கு இருசக்கர வாக​னத்​தில் வந்த இரு​வர் கலை​யரசனை சரமாரி​யாக வெட்​டி​விட்டு தப்​பினர். படுகாயங்களுடன் ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்பட்ட கலையரசன் நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார்.

இந்த கொலை விவ​காரம் தொடர்​பாக அசோக் நகர் போலீ​ஸார் வழக்​கு ​ப​திந்து, அசோக் நகர், புதூர் 13-வது தெரு​வைச் சேர்ந்த சஞ்​சய் (19), அவரது அண்​ணன் சக்​திவேல் (20), உறவினர் மேற்கு மாம்​பலம் சுனில் குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

இறந்துபோன கலை​யரசன், தமிழரசியை காதலித்து வீட்டு எதிர்ப்பை மீறி 4 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் செய்து கொண்​டார். அவர்​களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில் கணவன், மனைவி இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து இரு​வரும் பிரிந்து ஒன்​றரை ஆண்​டாக தனித்​தனி​யாக வாழ்ந்து வரு​கின்​றனர்.

தங்​கை​யுடன் சேர்ந்து வாழும்​படி, தமிழரசி​யின் சகோ​தரர் சக்​திவேல் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதில் இரு தரப்​பினருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு ஒரு​வரை ஒரு​வர் தாக்​கிக் கொண்​டனர். இந்த விவ​காரம் தொடர்பாக இரு​வரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டு, பின்​னர் வெளியே வந்​தனர்.

இந்​நிலை​யில்​தான் கடந்த 15-ம்தேதி தனி​யாக நின்​றிருந்த கலை​யரசனை சஞ்​சய் மற்​றும் சுனில்​கு​மார் தாக்கி கொலை செய்​துள்​ள​தாக முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x