Published : 19 May 2025 05:42 AM
Last Updated : 19 May 2025 05:42 AM

ஈரோடு | வயதான தம்பதி கொலை வழக்கில் 3 பேரிடம் விசாரணை

ஈரோடு: ஈரோடு மாவட்​டம் சிவகிரி அடுத்த விளக்​கேத்தி மேகரை​யான் தோட்​டத்​தில் வசித்து வந்த வயதான தம்​பதி ராம​சாமி - பாக்கி​யம் ஆகியோர் பணம், நகைக்​காக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கொலை செய்​யப்​பட்​டனர்.

இது தொடர்​பாக அறச்​சலூர் ஜல்​லிமேடு ராம்​நகர் ஆச்​சி​யப்​பன் (48), மேற்கு வீதி மாதேஸ்​வரன் (53), நடுப்​பாளை​யம் ரமேஷ் (52) ஆகியோரை நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​று, தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “சிவகிரி தம்​பதி கொலை வழக்​கில் 3 பேரிடம் விசா​ரித்து வரு​கிறோம். தேங்​காய் வியா​பாரி​கள் என்ற போர்​வை​யில் தனி​யாக உள்ள தோட்ட வீடு​களுக்​குச் சென்று நோட்​ட​மிட்​டு, கொள்​ளை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​லடம் உள்​ளிட்ட வெவ்​வேறு இடங்​களில் நடந்த கொலை வழக்​கு​கள் தொடர்​பாக​வும் இவர்​களிடம் விசா​ரணை நடந்து வரு​கிறது. இன்று (மே 19) முறைப்​படி கைது செய்​யப்​பட்​டு, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட உள்ளனர்” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x