Published : 16 May 2025 05:27 AM
Last Updated : 16 May 2025 05:27 AM
திருவாரூர்: பெங்களூரு போலீஸார் திருவாரூர் நகைக் கடைகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தி, ஒரு கிலோ தங்க நகைகளை மீட்டதுடன், 2 பேரை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் 1.360 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் பெங்களூரு போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை திருவாரூர் பாத்திமா காலனி பகுதியைச் சேர்ந்த தினகரன்(42), ஆறுமுகம்(45) ஆகியோர் மூலமாக, திருவாரூரில் உள்ள 3 நகைக் கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களூரு போலீஸார் நேற்று முன்தினம் மாலை திருவாரூருக்கு வந்து, தினகரன், ஆறுமுகம் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருவாரூர் விஜயபுரம் காந்தி சாலையில் உள்ள 3 நகைக் கடைகளில் சோதனை நடத்தி, 1.360 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீஸார் பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT