Last Updated : 22 Apr, 2025 09:23 AM

 

Published : 22 Apr 2025 09:23 AM
Last Updated : 22 Apr 2025 09:23 AM

‘முன்ன போனா முட்டுது... பின்ன போனா ஒதைக்கிது’ - காவலர்களைக் கதறவிட்ட கஞ்சா ஐயப்பன்!

என்ன சார் பண்றது... முன்ன போனா முட்டுது பின்ன போனா ஒதைக்கிதுன்ற கதையா போச்சுது எங்க பொழப்பு” என்று புலம்பித் தவிக்கிறார்கள் விருத்தாச்சலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேஷன் போலீஸார்!

​திரு​விளை​யாடல் தருமி கணக்​காய் இவர்​களை இப்​படி புலம்​ப​விட்​ட​வர் கஞ்சா அடிக்ட் ஐயப்​பன். விருத்​தாசலம் அருகே சி.கீனனூர் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் ஐயப்​பன். சிறுமியை திரு​மணம் முடித்த குற்​றத்​துக்​காக போக்சோ வழக்​கில் உள்ளே போய்​விட்டு ஜாமீனில் வெளி​யில் வந்த இவரை கஞ்​சாவுக்கு அடிமை என்​கிறது போலீஸ். இந்த நிலை​யில், கடந்த 10-ம் தேதி தன்​னிலை மறந்த நிலை​யில் மூதாட்டி ஒரு​வரை தாக்கி இருக்​கி​றார் ஐயப்​பன். இதையடுத்து அவரை சுற்றி வளைத்து ‘கவனித்த’ பொது​மக்​கள், கையோடு கொண்டு போய் கரு​வேப்​பிலங்​குறிச்சி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​திருக்​கி​றார்​கள்.

ஐயப்​பன் அப்​போது இருந்த நிலை​யில் அவரை எப்​படி விசா​ரிப்​பது என்று குழம்​பிப் போன போலீ​ஸார், மிக​வும் முன்​ஜாக்​கிரதை​யாக ஸ்டேஷனுக்கு வெளி​யிலேயே வைத்து விசா​ரணையை தொடங்கி இருக்​கி​றார்​கள். அப்​போது போலீ​ஸார் கேட்ட கேள்வி​களுக்கு முறை​யாகப் பதில் சொல்​லாமல், “நீங்க என்​னைய மூன்​றரை மணி நேரமா அடிச்​சிருக்​கீங்க. நான் அப்​படியே படுத்​துக் கெடந்​தேன். என்​னோட பனிய​னை​யும் கிழிச்​சுட்​டீங்க. மொதல்ல போயி புது பனியன் வாங்​கிட்டு வாங்க. எப்​டி​யும் ராத்​திரி முழுக்க வெச்சு என்​னைய கிழி கிழின்னு கிழிக்​கப் போறீங்க. அதுக்கு முன்​னாடி எனக்கு குவாட்​டரும் பிரி​யாணி​யும் வாங்​கிக் குடுங்க. இல்​லாட்​டி, அடிச்சு சாவடிச்​சிட்டு ஜட்​ஜ்கிட்ட ‘ஐயா ராத்​திரி​தான் கூட்​டிட்டு வந்​தோம் காலை​யில பார்த்தா செத்​துட்​டான்​’ன்னு சொல்​லப் போறீங்க” என்று போலீ​ஸாரிடம் தெனாவெட்​டாக பேசி இருக்​கி​றார் திரு​வாளர் ஐயப்​பன்.

அப்​போது பக்​கத்​தில் நின்ற காவலர் ஒரு​வர், “காலைலருந்து கால் கடுக்க நிக்​கிறேன்​டா... கொஞ்​சம் கம்​முன்னு இரு” என்​று, ‘அவன் இவன்’ படத்து போலீஸ் கணக்​காய் சொல்ல, அதற்​கும் அலட்​சி​ய​மாகவே பதில் சொல்லி இருக்​கி​றார் ஐயப்​பன். இதனையடுத்​து, வேறு வழி​யில்​லாமல் விசா​ரணையை முடித்​து(!?) ஐயப்​பனை ரிமாண்​டுக்கு அனுப்பி இருக்​கிறது போலீஸ். இம்சை அதோடு முடிந்​த​தாக போலீ​ஸார் நினைத்​துக் கொண்​டிருக்க, இந்த விசா​ரணை படலம் முழு​வதை​யும் யாரோ ஒரு​வர் முழு​மை​யாக வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடி​யா​வில் சுற்​ற​விட்டு லைக் பார்த்​திருக்​கி​றார்.

இதைப் பார்த்​து​விட்டு பலரும் காவல் துறைக்கு எதி​ரான விமர்​சனங்​களை பதி​விட்​டனர். இதையடுத்து கரு​வேப்​பிலங்​குறிச்சி பொறுப்​புக் காவல் ஆய்​வாளர் கவி​தா, இதுகுறித்து விசா​ரணை நடத்​தி​னார். விசா​ரணை​யின் முடி​வில், ஐயப்​பனை ‘டீல்’ செய்த காவலர்​கள் அனை​வ​ருக்​கும் தற்​போது மெமோ கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஆய்​வாளர் கவி​தா​விடம் பேசினோம். “என்ன சார் பண்​றது... ‘குளியலறை தவிர்த்து ஏனைய இடங்​கள் எல்​லாம் பொது இடமாவே மாறிப் போச்​சு. அதனால அனைத்​தை​யும் கவனமா கையாளுங்​க’ன்னு முதலமைச்​சர் ஐயா சொல்​லிக்​கிட்டே இருக்​காரு. ஆனாலும் இப்​படியொரு சம்​பவம் நடந்​துருச்​சு. இது மாதிரி​யான போதை ஆசாமிகள நாங்க எப்​படி கையாள்​றதுன்னே தெரியல. முன்ன போனா முட்​டுது பின்ன போனா ஒதைக்​கிதுன்ற கதையா இருக்கு எங்க கதை.

எங்க போலீஸ் மேல​யும் தப்​புச் சொல்ல முடி​யாது. ஏன்​னா... அவனே போதை​யில இருந்​துருக்​கான். ஊர் மக்​கள் வேற அவனுக்கு தர்ம அடி குடுத்​துத்​தான் கொண்டு வந்து விட்​டுருக்​காங்க. அப்​படி இருக்​கவன ஸ்டேஷனுக்​குள்ள வெச்சு விசா​ரிச்சு ஏதாச்​சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்​சுன்னா லாக் அப் டெத்​துன்னு அப்​ப​வும் போலீஸத்​தான் தூத்​து​வாங்க. அதுக்​குப் பயந்து தான் அவன உள்ள வெச்சு விசா​ரிக்​காம வெளி​யில வெச்சு விசா​ரிச்​சுருக்​காங்க. அது குத்​த​மாப் போயி இப்ப அதி​காரி​களுக்கு பதில் சொல்ல வேண்​டிய​தாப் போச்​சு. அவன வீடியோ எடுக்​குற வரைக்​கும் அஜாக்​கிரதையா இருந்​ததுக்​காக எங்​காளுங்​களுக்கு இப்ப மெமோ குடுக்க வேண்​டிய​தாப் போச்​சு” என்​றார் அவர்.

இது குறித்து அந்த ஸ்டேஷனின் சட்​டம் - ஒழுங்கு பிரிவு காவலர் ஒரு​வர் நம்​மிடம் நைசாக, “சார்​... இத்​தனைக்​கும் காரணம் தனிப்​பிரிவு காவலர்​கள் தான். கஞ்சா போதை ஆசாமிகள், இது​போன்ற போக்சோ குற்​ற​வாளி​கள் நடமாட்​டம் குறித்து தனிப்​பிரிவு போலீ​ஸாருக்கு நல்​லாவே தெரி​யும். அவர்​கள் குறித்​தெல்​லாம் முன்​கூட்​டியே தகவல் தந்​தால் சட்​டம் - ஒழுங்கு போலீ​ஸார் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களை எடுக்க முடி​யும். ஆனால், தனிப்​பிரிவு போலீ​ஸார் சிலர், இது​போன்ற சமூக விரோ​தி​களு​டன் தனி​யாக ‘டீல்’ வைத்​துக் கொண்டு அனைத்​தை​யும் மறைத்​து​விடு​கி​றார்​கள். ‘டீல்’ படி​யாத போது மட்​டும் எங்​களை இழுத்து தெரு​வுல விட்​டுடுறாங்க” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x