Published : 17 Apr 2025 07:23 AM
Last Updated : 17 Apr 2025 07:23 AM

சேலம் | காதலிக்க மறுத்ததால் விபரீதம்: கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்

கோப்புப் படம்

சேலம்: சேலம் பழைய பேருந்து நிலை​யத்​தில் நேற்று காலை அரசு மகளிர் கலைக் கல்​லூரி​யில் பயிலும் மாணவி ஒரு​வர், கல்​லூரி செல்​வதற்​காக பேருந்​துக்கு காத்திருந்​தார். அப்​போது, ஆட்​டை​யாம்​பட்​டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒரு​வர், அந்த மாண​வி​யிடம் பேச்​சுக் கொடுத்​தார். திடீரென அவர்​களிடையே வாக்​கு​வாதம் முற்​றியது. இதில் ஆத்​திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் மாண​வி​யின் வயிற்​றில் குத்​தி​னார்.

இதைப் பார்த்த அக்​கம்பக்​கத்​தினர் அவரைப் பிடிக்க முயன்​றனர். உடனே அந்த இளைஞர், தனது கழுத்தை அறுத்​துக்கொண்டு தற்​கொலைக்கு முயன்​றார். தகவலறிந்து வந்த சேலம் டவுன் போலீ​ஸார், இரு​வரை​யும் மீட்டு சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “கல்​லூரி மாண​வியுடன் இன்​ஸ்​டாகி​ராமில் அறி​முக​மாகிய இளைஞர், தொடர்ந்து நட்​பாகப் பழகி​யுள்​ளார். ஒரு கட்​டத்​தில், அவர் மாண​வியைக் காதலிக்க ஆரம்​பித்​துள்​ளார்.

இதையறிந்த மாணவி காதலிக்க மறுத்​து, செல்​போனில் பேசுவதை நிறுத்​திக் கொண்​டார். இதனால் ஆத்​திரமடைந்த இளைஞர், பேருந்து நிலை​யத்​தில் காத்​திருந்த மாண​வியை கத்​தி​யால் குத்தி கொலை செய்ய முயன்​றுள்ளார். மேலும், தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்​ளார். இதுகுறித்​து வழக்கு பதிவு செய்​து, வி​சா​ரித்​து வருகிறோம்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x