Published : 11 Apr 2025 02:48 PM
Last Updated : 11 Apr 2025 02:48 PM

இலங்கைக்கு கடத்த முயன்ற 412 கிலோ கஞ்சா; 1143 கிலோ மஞ்சள் பறிமுதல்:  3 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் மஞ்சள் மூடைகள்

ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 412 கிலோ கஞ்சா மற்றும் 1143 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினர் அந்நாட்டு ராணுவத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கிடமான ஒரு சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில், அதிலிருந்து 80 பண்டல்களில் 412 கிலோ கஞ்சாவை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், சரக்கு வாகனத்திலிருந்த மன்னார் மற்றும் கல்பிட்டியைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.இதேபோல், புத்தளம் மாவட்டம் நுரைச்சாலையில் வாகனச் சோதனையின் போது தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1,143 கிலோ மஞ்சளை கைப்பற்றி மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x