Published : 09 Apr 2025 05:52 AM
Last Updated : 09 Apr 2025 05:52 AM

தி.மலை | பேனர் வைக்க முயன்​ற​போது மின்​சா​ரம் பாய்ந்து 2 சிறு​வர்கள்​ உயி​ரிழப்பு

தனுஷ்குமார், லோகேஸ்வரன்

திரு​வண்​ணா​மலை: டிஜிட்​டல் பேனர் வைக்க முயன்​ற​ போது மின்​சா​ரம் பாய்ந்து 2 சிறுவர்​கள் உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாநக​ராட்சி அண்ணா நகர் 5-வது தெரு​வைச் சேர்ந்​தவர் ராஜா மகன் லோகேஸ்​வரன்​(15). திருநகரைச் சேர்ந்​தவர் ராமலிங்​கம் மகன் தனுஷ்கு​மார்​(17). நண்​பர்​களான இரு​வரும் சில இளைஞர்​களு​டன் இணைந்​து, மணலூர்​பேட்டை சாலை​யில் நண்​பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்​கும் டிஜிட்​டல் பேனரை நேற்று முன்​தினம் நள்​ளிரவு வைக்க முயன்​றுள்​ளனர்.

அப்​போது, பேனரில் உள்ள இரும்​புக் கம்பி அரு​கே​யுள்ள மின்​மாற்​றி​யில் உரசி​யது. இதில் மின்​சா​ரம் பாய்ந்து லோகேஸ்​வரன், தனுஷ்கு​மார் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை நகர போலீ​ஸார் இரு​வரது உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், விபத்து குறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். தனுஷ்கு​மார் பிளஸ்-2 தேர்வு எழு​தி​விட்​டு, முடிவுக்​காக தனுஷ்கு​மார் காத்​திருந்​துள்​ளார். லோகேஸ்​வரன் 8-ம் வகுப்பு வரை படித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x