Published : 13 Mar 2025 06:21 AM
Last Updated : 13 Mar 2025 06:21 AM
சென்னை: மலேசியாவிலிருந்து அரிய வகை வன உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகள் கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, குரங்கு உள்ளிட்ட 8 அரிய வகை வன உயிரினங்கள் இருந்தன. அதில் 3 இறந்திருந்தன. உயிருடன் இருந்த 5 வன உயிரினங்கள் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
உயிரிழந்துவிட்ட 3 வன உயிரினங்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தீயிட்டு அழிக்கப்பட்டன. வன உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த 2 பயணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT