Published : 03 Mar 2025 12:47 AM
Last Updated : 03 Mar 2025 12:47 AM

குமாரபாளையம் வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 4.5 டன் ஜெலட்டின் பறிமுதல்

பிரதிநிதித்துவப் படம்

நாமக்கல்: கு​மாரபாளையம் வழியாக லாரி​யில் கடத்த முயன்ற 4.5 டன் ஜெலட்​டின் குச்​சிகள் பறிமுதல் செய்​யப்​பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமார​பாளையம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு பள்ளி பாளையம் பிரிவு சாலை​யில் வாகன தணிக்கை​யில் ஈடுபட்​டிருந்​தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி போலீ​ஸார் சைகை காட்​டி​யும், நிற்​காமல் சென்​றது. இதையடுத்து, அந்த லாரியை விரட்​டிச் சென்ற போலீ​ஸார், வளையக்​காரனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிடித்​தனர்.

தொடர்ந்து, லாரி​யில் சோதனை​யிட்​ட​போது, தக்காளி லோடு​களுக்கு இடையே 4.5 டன் ஜெலட்​டின் குச்​சிகள் இருந்தது தெரிந்​தது. இதையடுத்து, ஜெலட்​
டின் குச்​சிகள் மற்றும் லாரியை போலீ​ஸார் பறிமுதல் செய்​தனர். இது தொடர்பாக வழக்​குப் பதிவு செய்து, ஓட்டுநர் பார்த்திபனிடம் விசாரணை நடத்​தினர். விசா​ரணை​யில், கிருஷ்ணகிரி மாவட்​டத்​திலிருந்து, கேரளா​வுக்கு ஜெலட்​டின் குச்​சிகளைக் கடத்த முயன்றது தெரிந்​தது. தொடர்ந்து அவரிடம் ​போலீ​ஸார் ​விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x