Published : 25 Feb 2025 06:32 AM
Last Updated : 25 Feb 2025 06:32 AM

சென்னை | 12-ம் வகுப்பு மாணவியிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது

சென்னை: சென்னை திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி ஐஸ்அவுஸ், டாக்டர் நடேசன் சாலை​யில் தீர்த்​த​பாலீஸ்​வரர் கோயில் அருகே செல்​போனில் பேசி​யபடி நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்போது, அவ்வழியே ஆக்டிவா வகை இருசக்கர வாகனத்​தில் வந்த இருவர் கண் இமைக்​கும் நேரத்​துக்​குள் மாணவி​யின் செல்​போனை பறித்து தப்பினர்.

அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து, அவரது தந்தை​யிடம் கண்ணீர் மல்க தெரி​வித்​தார். இதையடுத்து, மாணவி சார்​பில் அவரது தந்தை ஐஸ்அவுஸ் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளை கைப்​பற்றி அதன் அடிப்​படை​யில் துப்பு துலக்​கினர்.

இதில், மாணவி​யிடம் செல்​போன் பறித்தது 16 வயது சிறுவன் என்பது தெரிந்​தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீ​ஸார், சிறார் நீதி குழு​மத்​தில் ஆஜர்​படுத்தி அரசு கூர்​நோக்கு இல்லத்​தில் சேர்த்​தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்​டாளியை ​போலீ​ஸார்​ தொடர்​ந்​து தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x