Published : 08 Feb 2025 06:21 AM
Last Updated : 08 Feb 2025 06:21 AM

புழல் மத்திய சிறையில் சோப்புக்குள் மறைத்து வைத்து கைதிகளுக்கு கொடுக்க முயன்ற கஞ்சா பறிமுதல்

செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்​தில் விசாரணை பிரிவு, தண்டனை பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகிய​வற்றில் 3,000-க்கும் மேற்​பட்ட கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளை பார்ப்​ப​தற்காக நாள்​தோறும் கைதி​களின் உறவினர்​கள், நண்பர்கள் நூற்றுக்​கும் மேற்​பட்​டோர் சிறை வளாகத்​துக்கு வந்து செல்​கின்​றனர். அவ்வாறு வருபவர்கள் சிறை கைதி​களுக்கு வழங்​கும் உணவு பொருட்களை சிறை காவலர்கள் சோதனை செய்து, சம்பந்​தப்​பட்ட கைதி​களிடம் வழங்​குவது வழக்​கம்.

அந்த வகையில், புழல் மத்திய சிறை பார்​வை​யாளர் பகுதிக்கு நேற்று முன் தினம், இரு வேறு வழக்​குகள் தொடர்பாக கைதாகி, சிறை​யின் விசாரணை பிரி​வில் உள்ள கோபிநாத், ஆனந்​த​ராஜ் ஆகியோரை சந்திக்க அவர்​களது உறவினர்கள் வந்தனர். அவர்கள் கைதிகள் இருவருக்கான சோப்பு, உணவுப் பொருட்​கள், உடைகளை சிறை காவலர்​களிடம் அளித்து​விட்டு சென்​றனர். அவற்றை சிறை காவலர்கள் சோதனை செய்​தனர். குளியல் சோப்பு, துணி துவைக்​கும் சோப்பு ஆகிய​வற்றில் 31 கிராம் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகார்​களின் பேரில், சோப்​புக்​குள் மறைத்து வைத்து கைதி​களுக்கு கஞ்சா கொடுக்க முயன்றது தொடர்​பாக, கைதிகள் கோபிநாத், ஆனந்​த​ராஜ், பார்​வை​யாளர்கள் நந்தகு​மார், ரேவதி, அன்​பழகன், சந்தியா ஆகிய 6 பேர் மீது வழக்கு ப​திவு செய்து ​விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x