Published : 06 Feb 2025 07:12 AM
Last Updated : 06 Feb 2025 07:12 AM

பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.20 கோடி மோசடி செய்த நபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிவிலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர், ஸ்கூட்டர், தையல் மிஷின், வீட்டு உபயோக சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பாதி விலையில் தருவதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளார். இதற்காக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்தி இந்த சலுகையை அவர் வழங்குவதாகவும் அவர் மக்களிடம் உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் அவரிடம் பணத்தை கட்டி ஏமாந்துள்ளனர்.

கடந்த 2022-லிருந்து இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகையை அவர் சுருட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூவத்துபுழா மாவட்டத்தில் மட்டும் இவர் ரூ.9 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மூவத்து புழா மற்றும் இடுக்கி மாவட்டங்களை சேர்ந்த மாவட்டங்களில் அனந்து மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கொச்சி போலீஸார் அனந்துவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x