Published : 06 Feb 2025 12:41 AM
Last Updated : 06 Feb 2025 12:41 AM

கரூரில் ரூ.1.25 லட்சத்தை மறைத்த 8 போலீஸார் மீது டிஐஜி நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

கரூரில்: கரூர் வெங்​கமேடு சின்னகுளத்​துபாளையம் பகுதி​யில் ஜன. 30-ம் தேதி காரில் குட்கா உள்ளிட்ட புகை​யிலைப் பொருட்களை கடத்திய 3 பேரை தனிப்படை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்த 168 கிலோ புகை​யிலைப் பொருட்​கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்​யப்​பட்​டது.

இந்நிலை​யில், பறிமுதல் செய்த ரூ.1.25 லட்சத்தை கணக்​கில் காட்​டாமல் போலீ​ஸார் மறைத்து​விட்​டதாக புகார் எழுந்​தது. இதில் தொடர்​புடைய கரூர் நகர காவல் ஆய்வாள​ரும், வெங்​கமேடு காவல் ஆய்வாள​ருமான மணிவண்​ணன், உதவி ஆய்வாளர்கள் உதயகு​மார் (தாந்​தோணிமலை), சித்ரா தேவி (வெங்​கமேடு), சிறப்பு உதவி ஆய்வாளர் செந்​தில்​கு​மார், வெங்​கமேடு தனிப் பிரிவு காவலர் ரகுநாத், கரூர் நகர காவலர்கள் விக்​னேஷ், ஆர்.தம்​பிதுரை உள்ளிட்ட 8 பேரை காத்​திருப்​போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார் நேற்று முன்​தினம் உத்தர​விட்​டார். வெங்​கமேடு ஆய்வாளராக இருந்த செந்​தூர​பாண்டி, பெண்​ணிடம் ஆபாச​மாகப் பேசி​யதாக எழுந்த புகாரில் ஏற்கெனவே காத்​திருப்புப் பட்​டியலில் வைக்​கப்​பட்​டுள்​ளார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x