Published : 30 Jan 2025 06:45 AM
Last Updated : 30 Jan 2025 06:45 AM

சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்​கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை

சென்னை: சென்னை வண்ணாரப்​பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்​டிப் பறித்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன்​(42), ஊழியர்கள் பிரதீப் ​(41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

விசா​ரணை​யில் இந்த வழிப்பறி வழக்​கில் சைதாப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் சட்டம்​-ஒழுங்கு பிரி​வில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய சன்னி லாயிடுக்​கும் தொடர்பு இருப்பது தெரிய​வந்​தது.

இதையடுத்து தலைமறைவாகி உத்த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கிய அவரை திரு​வல்​லிக்​கேணி தனிப்படை போலீ​ஸார் கடந்த 15-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த நிலை​யில் சன்னி லாயிடுவை 4 நாள் காவலில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் நேற்று முன்​தினம் எடுத்​து அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்​கொண்டு வருகின்றனர். இதில், வழிப்பறி தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்​துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x