Published : 21 Jan 2025 12:37 AM
Last Updated : 21 Jan 2025 12:37 AM

திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை: குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது

திருமயம் அருகே கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிம வள கொள்ளை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி(56). சமூக ஆர்வலரான இவர், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், கடந்த 17-ம் தேதி அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

காட்டுபாவா பள்ளிவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் அதே இடத்திலேயே ஜகபர் அலி உயிரிழந்தார். தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, தனது கல் குவாரி தொழிலுக்கு இடையூறாக இருந்ததால், கல் குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சதி திட்டம் தீட்டி, ஜகபர் அலி மீது லாரியை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கல்குவாரி உரிமையாளர்களான துளையானூர் ஊராட்சி பாப்பாத்தி ஊரணியை சேர்ந்த ஆர்.ராசு(54), எஸ்.ராமையா(50), ராசு மகன் தினேஷ்குமார்(25) மற்றும் திருமயம் ஊத்துக்கேணியை சேர்ந்த லாரி உரிமையாளர் எஸ்.முருகானந்தம்(56), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பிக்கிராந்தையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆர்.காசிநாதன்(45) ஆகியோர் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், ராமையா தவிர மற்ற அனைவரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலையின் பின்னணி: இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: ராசு, ராமையா ஆகியர் சேந்து துளையானூர் பகுதியில் கல்குவாரி தொழில் செய்து வந்தனர். இவர்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலர்களுக்கு ஜகபர் அலி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தார். மேலும், கடந்த வாரம் கூட வருவாய்த் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது தொழிலுக்கு இடையூறாக இருந்ததால், குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ்குமார் மற்றும் முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஜகபர் அலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வவ்வாணி கண்மாய் அருகே சென்றபோது முருகானந்தம் தனது லாரி மூலம் இடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனிசாமி அவசரப்படுகிறார்: இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தனது எக்ஸ் தளத்தில், “ஜகபர் அலி உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி ஏன் அவசரப்படு கிறார் என தெரியவில்லை. அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அவர் அவதூறு பரப்பலாமா?. தூத்துக்குடி துப்பாக்கி சம்ப வத்தையே டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் தானே என்று கடந்து போக வேண்டுமா?” என்று கூறியுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்:

அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: கனிமவளக் கொள்​ளை​யர்கள் மீது நடவடிக்கை எடுக்​காமல், புகார் அளித்​தவரையே காட்​டிக் கொடுத்து விட்டு, மிக மிக மோசமான முன்னு​தாரணத்தை ஏற்படுத்​தி​யிருக்​கிறது திமுக அரசு. சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை: இவ்வழக்​கில் லாரி டிரைவரை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்​தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்​கொள்ள நேரிடும்.

பாமக தலைவர் அன்புமணி: இக்கொலை​யில் சம்பந்​தப்​பட்ட அனைவரை​யும் கைது செய்ய, இவ்வழக்கை சிறப்புப் புலனாய்​வுக் குழு விசா​ரிக்க ஆணையிட வேண்​டும்.

தேமுதிக பொதுச்​செயலாளர் பிரேமலதா விஜய​காந்த்: சமூக ஆர்வலர் படுகொலையை கண்டித்து புதுக்​கோட்டை மாவட்​டம், திரு​மயம் தாலுகா அலுவலகம் அருகில் தேமுதிக சார்​பில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்​பாட்டம் நடத்​தப்​படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகாதலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.​ஜவாஹிருல்லா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x