Published : 18 Jan 2025 12:40 AM
Last Updated : 18 Jan 2025 12:40 AM

மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்​பாடி அடுத்த கீழ்​முட்டுக்​கூர் கிராமத்தில் நேற்று முன்​தினம் எருது ​விடும் விழா நடைபெற்​றது. அப்போது, அந்தப் பகுதி​யில் கள்ளத்​தனமாக மது பாட்​டில்கள் விற்பனை செய்வது தெரிய​வந்​தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் மதிவாணன் உத்தர​வின்​பேரில், காவல் துறை​யினர் அங்கு திடீர் சோதனை​யில் ஈடுபட்​டனர். அப்போது, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றி​யத்​தின் 6-வது வார்டு திமுக கவுன்​சிலர் வேலு என்பவரது வீட்​டின் பின்​புறம் பதுக்கி வைத்​திருந்த, 8 கர்நாடக மாநில மது பாக்​கெட்டுகளை போலீ​ஸார் பறிமுதல் செய்​தனர்.

இந்த பாக்​கெட்டுகளை தனது உறவினர் ஒருவர் பெங்​களூருவில் இருந்து கொண்டு​வந்​ததாக வேலு கூறி​யுள்​ளார். இதையடுத்து, வேலூர் கலால் பிரிவு ஆய்வாளர் செந்​தில் வழக்கு பதிவு செய்து, வேலுவை கைது செய்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x