Published : 18 Jan 2025 12:36 AM
Last Updated : 18 Jan 2025 12:36 AM

போலீஸார் கண்முன்பாகவே இளைஞர் படுகொலை - பெரம்பலூரில் நடந்தது என்ன?

கை.களத்தூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பெரம்பலூர்: ​முன்​விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சு​வார்த்​தைக்கு போலீ​ஸார் சென்​ற​போது, அவர்​களது முன்னிலை​யிலேயே இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

பெரம்​பலூர் மாவட்டம் வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​(32). அதே பகுதி​யைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​(30). இருவரும் நெல் அறுவடை இயந்​திரத்​தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர். இவர்​களுக்​கிடையே முன்​விரோதம் இருந்து வந்தது.

இந்நிலை​யில், அவர்​களுக்​கிடையேநேற்று மீண்​டும் தகராறு ஏற்பட்​டது. இது தொடர்பாக கை.களத்​தூர் காவல் நிலை​யத்​தில் மணிகண்டன் புகார் அளித்​தார். இதையடுத்து, தலைமைக் காவல் ஸ்ரீதர், ஊர்க்​காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரு தரப்​பினரிடையே சமாதானம் செய்ய முடிவு செய்து, மணிகண்டனை அழைத்​துக் கொண்டு, கை.களத்​தூர் காந்தி நகர் பகுதி​யில் உள்ள நெல் அறுவடை இயந்திர உரிமை​யாளர் அருண் என்பவரின் வயலுக்​குச் சென்​றனர்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்​திரன், போலீ​ஸாருடன் வந்த மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்​டி​யுள்​ளார். இதனால் அதிர்ச்​சி​யடைந்த போலீ​ஸார், தேவேந்​திரனைப் பிடித்து கை.களத்​தூர் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். மேலும், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்ட போலீ​ஸார், மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்​தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்​கள், மணிகண்டன் உடலை எடுத்​துக் கொண்டு கை.களத்​தூர் காவல் நிலை​யத்​தின் முன் வைத்து, நீதி கேட்டு மறியலில் ஈடுபட்​டனர். அப்போது சிலர் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்​கினர். இதில் காவல் நிலை​யத்​தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து காவல் நிலையம் பூட்​டப்​பட்டு, அங்கு போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார், பெரம்​பலூர் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்​டோர் அங்கு சென்று, போராட்​டத்​தில் ஈடுபட்​ட​வர்​களிடம் பேச்சு​வார்த்தை நடத்​தினர். சுமார் 4 மணி நேரத்​துக்​குப் பிறகு பொது​மக்கள் மறியலைக் கைவிட்டு, அங்​கிருந்து கலைந்து சென்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x