Published : 17 Jan 2025 02:38 AM
Last Updated : 17 Jan 2025 02:38 AM

விருத்தாசலத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை

கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிடும் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர். (உள்படம்) கதிர்காமன்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்​தாசலம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை செய்​யப்​பட்​டுள்​ளார். அவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

விருத்​தாசலத்தை அடுத்த எம்.வீராரெட்​டிகுப்பம் கிராமத் தைச் சேர்ந்​தவர் கதிர்​காமன்​ (43). அதிமுக நிர்​வாகியான இவர் நேற்று முன்​தினம் இரவு அதே கிராமத்​தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோ​ருடன் முதனை கிராம முந்​திரித் தோப்​புக்​குச் சென்று, மது அருந்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. அப்போது அவர்​களுக்கு இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தாக​வும் தெரி​கிறது.

பின்னர் கதிர்​காமன் வீட்டுக்​குச் சென்ற பிரபாகரன், அவரது மனைவி​யிடம் தங்களுக்​குள் பிரச்​சினை ஏற்பட்டு விட்​ட​தாகக் கூறி​யுள்​ளார். இதையடுத்து, கதிர்​காமன் மனைவி மற்றும் உறவினர்கள் முந்​திரித் தோப்​புக்​குச் சென்று பார்த்த​போது, அங்கு கதிர்​காமன் எரிக்​கப்​பட்ட நிலை​யில் சடலமாகக் கிடந்​துள்ளார்.

தகவலறிந்த ஊமங்​கலம் போலீ​ஸார் கதிர்​காமன் உடலைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக முண்​டி​யம்​பாக்கம் அரசு மருத்​துவ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். தொடர்ந்து, கடலூர் எஸ்.பி.ஜெயக்​கு​மார், டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் சம்பவ இடத்​தைப் பார்​வை​யிட்டனர்.

மோப்​ப நாய் சம்பவ இடத்​தில் இருந்து ஓடிச்சென்று, ராணுவ வீரர் பாலகிருஷ்ணன் வீட்டருகே நின்​றது. இதற்​கிடை​யில், பிரபாகரனைப் பிடித்து போலீ​ஸார் விசாரணை மேற்​கொண்​டனர். விசராணையில்,ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், கதிர்காமனை கொலை செய்து, அவரது உடலை எரித்து விட்டு தப்பிச் சென்றுதெரிய​வந்​தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள பால​கிருஷ்ணனை ​போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x