Published : 14 Jan 2025 07:02 AM
Last Updated : 14 Jan 2025 07:02 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

சதீஷ்குமார்

சென்னை: கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் சிகிச்​சை​யில் இருந்த பெண்​ணிடம் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை வில்​லிவாக்கம் பகுதி​யைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் உள்நோ​யாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெண்கள் வார்​டில் நேற்று அதிகாலை 1.30 மணியள​வில் தூங்​கிக் கொண்​டிருந்த​போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்​டுள்​ளார்.

அப்போது மருத்​துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து அவரை மடக்​கிப் பிடித்​து போலீ​ஸாரிடம் ஒப்படைத்​தனர். விசாரணையில், பிடிபட்ட அந்த நபர் ராணிப்​பேட்டை மாவட்​டத்தை சேர்ந்த சதீஷ்கு​மார் (25) என்பது தெரிய​வந்​தது. இவருடைய தாயார் உடல்​நலக் குறைவால் அதே வார்​டில் சிகிச்சை பெற்று வருவ​தால், அவரை பார்த்​துக் கொள்ள அந்த வார்​டுக்கு சதீஷ்கு​மார் வந்துள்ளார்.

அந்த நேரத்​தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய​வந்​தது. இச்சம்​பவத்​தின்​போது சதீஷ்கு​மார் மது போதை​யில் இருந்​ததாக கூறப்​படு​கிறது. இதனையடுத்து, கீழ்ப்​பாக்கம் போலீ​ஸார் சதீஷ்கு​மார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் வழக்​குப் ​ப​திவு செய்து அவரை கைது செய்​து நீதி​மன்றக் காவலில் சிறை​யில் அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x