Published : 03 May 2024 06:52 AM
Last Updated : 03 May 2024 06:52 AM

போலீஸாருக்கு பயந்து திருடிய மாடுகளை வேறு இடத்தில் விட்டுச் சென்ற நபர்: தகவலை அட்டையில் எழுதி கேட்டில் தொங்கவிட்டார்

திருடுபோன மாடுகள் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயி பட்டுராஜ்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற நபர் போலீஸுக்குப் பயந்து,வேறு இடத்தில் விட்டுச் சென்றார்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்புபகுதியில் உள்ளது. அங்கு பசுமாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதிபட்டுராஜ் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் இரண்டைக் காணவில்லை. மர்ம நபர் மாடுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில்அவர் புகார் அளித்திருந்தார். மேலும், பல்வேறு இடங்களில் மாடுகளைத் தேடியுள்ளார்.

இதற்கிடையில், நேற்று காலைபட்டுராஜ் தோட்டத்துக்குச் சென்றபோது, தோட்ட வாயிலில் ஒரு அட்டை கட்டப்பட்டிருந்தது. அதில்,உங்களது மாடு சங்கரன் குடியிருப்பு கெபி அருகேயுள்ள புளியமரத்தின் அடியில் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தோட்ட வாயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த அட்டை.

உடனே அங்கு பட்டுராஜ் சென்றுபார்த்தபோது, அவரது 2 மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவற்றை தனது தோட்டத்துக்குகொண்டுவந்தார். பட்டுராஜ் மாடுகளை தீவிரமாக தேடி வருவதை அறிந்த திருடன், போலீஸுக்குப் பயந்து, மாடுகளை வேறு இடத்தில் விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x