Published : 16 Nov 2025 11:57 AM
Last Updated : 16 Nov 2025 11:57 AM

சென்னையில் கியூபா திரைப்பட விழா

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது.

நவ.20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கும் இப்பட விழாவில் 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நவ.20-ம் தேதி மாலை 5 மணிக்கு அலெஜாண்ட்ரா கில் இயக்கிய ‘ஏஎம்-பிஎம்' (AM-PM) படமும், இரவு 7 மணிக்கு பெர்னாண்டோ பெரேஸ் இயக்கிய ‘மார்டி, த ஐ ஆஃப் த கன் ட்ரி’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

நவ.21ம் தேதி மாலை 5 மணிக்கு, ‘எ நைட் வித் த ரோலிங் ஸ்டோன்ஸ்’, இரவு 7 மணிக்கு ‘நெல்சிட் டோஸ் வேல்ர்டு’ ஆகிய படங்கள் திரையிடப் படுகின்றன. இத்தகவலை இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x