Published : 07 Feb 2025 08:34 AM
Last Updated : 07 Feb 2025 08:34 AM
உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிப்ரவரி 3-ம் தேதி இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கிராமி விருது விழா எப்போதுமே புகழுக்கும் சர்ச்சைக்கும் சேர்ந்தே பெயர் பெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் உடைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கிராமி விழாவுக்கு வருகைத் தந்திருந்த பிரபல ராப் பாடகர் கான்ய வெஸ்ட்டின் மனைவி பியான்கா சென்சோரி, ‘நியூட் டிரெஸ்’ எனப்படும் உள்மறைப்பில்லாத உடையை அணிந்து வந்திருந்தார்.
பியான்காவின் இந்த ஆடைத் தேர்வு சர்ச்சைக்குள்ளான நிலையில் பலரை முகம் சுளிக்கவும் வைத்தது. இதனால் விழாவில் இருந்து அவரும் அவரது கணவரும் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. எது எப்படியோ, அவ்வப்போது கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்த இணை அதே நோக்கில் இப்படிச் செய்திருக்கலாம் என்றும், பொது வெளியில் இசைக் கலைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலர் கடுகடுத்தனர். - சிட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT