Published : 28 Jul 2014 02:39 PM
Last Updated : 28 Jul 2014 02:39 PM
'இனிமேல் நான் தான் யங் சூப்பர் ஸ்டார்' என்று பிரேம்ஜி அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, "ஈகோவுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத விஷயங்களை துறக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி, 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைத் துறக்கிறேன். எனது தொழிலின் முக்கியமான கட்டத்தை நான் எட்டியுள்ளதால், என்னைச் சுற்றி உருவாகியிருக்கும் பிம்பத்தைப் பற்றியும், அது என் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் உணர்கிறேன்." என்று சிம்பு அறிக்கை வெளியிட்டார்.
அதன் மூலம் சிம்பு, இனிமேல் தன்னை யாரும் யங் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் நெருங்கிய நண்பர் பிரேம்ஜி அமரன். இருவரும் தங்களுக்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.
இந்நிலையில் ஜூலை 26ம் தேதி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது சிம்பு தனக்கு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தினை அளித்துவிட்டதாக பிரேம்ஜி அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"எனது தலைவர் எஸ்.டி.ஆர் தன்னுடைய யங் சூப்பர் பட்டத்தை எனக்கு கொடுத்துவிட்டார். எனவே நான் இன்று முதல் யங் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT