Published : 16 Jul 2014 12:18 PM
Last Updated : 16 Jul 2014 12:18 PM
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
'கத்தி' படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். 'கத்தி' படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது அவரது தரப்பில் இருந்து உறுதிசெய்யப்பட்டது.
ஆனால், விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தி வலம் வந்தாலும் படக்குழுவோ மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் யாருமே உறுதிசெய்யவில்லை.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன், "சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் சார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். சரித்திர படத்தில் நடிப்பதற்கான நேரமிது(Am super happy to be vijay sirs leading lady in Chimbudevan's next! Time to make an epic film! #tamilponnu #excitement #superu #whatastory)"என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT