Published : 10 Jun 2014 12:24 PM
Last Updated : 10 Jun 2014 12:24 PM
தன் கனவுப் படைப்பான மருதநாயகம் படத்தை எப்போது வேண்டுமானாலும் புதிப்பிக்க தான் காத்திருப்பதாக, நடிகர் கமல்ஹாசன் 'தி இந்து' டிவிட்டர் பக்கத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறி உள்ளார்.
’தி இந்து’ ஆங்கில நாளிதழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கடந்த மாதம் நடந்த கேன்ஸ் விழாவில் முதன்முறையாக பங்கேற்றது குறித்த அனுபவத்தை ட்விட்டர் வாசகர்களுடன் பகிர்ந்த கொண்ட கமல், தனது பல வருடக் கனவுப் படைப்பான 'மருதநாயகம்' குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார்.
கேள்வி: ”மருதநாயகம் எப்போது முழுமையாகும்?”
கமல்ஹாசன் பதில்: " நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன். இங்கிருக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் அந்த படைப்புக்கு கை கொடுக்க முன்வரவில்லை. நானும் முயற்சி செய்கிறேன். சாதாரணப் படமாக மருதநாயகம் இருக்காது. மருதநாயகத்தை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்க நினைக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் இந்த புதுப்பித்தல் நடக்கலாம்"
கமல்ஹாசனின் இந்த பதிலால், அவர்கள் ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT