Published : 01 Jun 2022 02:22 PM
Last Updated : 01 Jun 2022 02:22 PM
பிரபல திரையிசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53. தமிழ்த் திரைப்படங்களில் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். அத்தனையும் நம்மை ஈர்க்கத்தக்கவை. காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.
கேகேவின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவையொட்டி நெட்டிசன்கள் பலரும் பதிவுகளால் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவற்றில் சில இங்கே...
மச்சக்கன்னி: "#KK இறப்பு செய்தி கேட்டதில் இருந்து நெஞ்சு மேல கல்ல தூக்கி வச்ச மாதிரி இருக்கு. கேகே இப்போ யாருக்கும் தெரியாது. அப்போ அவர்தான் எங்களுக்கு. அவர பற்றி நிறைய பேசுவோம் நானும் தம்பியும். அவர் சாங் எல்லாமே ஹிட் அவரோட. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்."
கிச்சா: "கேகே பாடுனதுனு தெரியாமலே அவரோட நெறைய பாட்டு கேட்ருக்கேன்.."
Pen Queen:
Singer KK appreciation thread.
Singer KK appreciation thread.
— Pen Queen (@pen_queeen) November 10, 2021
The most underrated singer ever... /1 pic.twitter.com/1NgtYImi7P
Nelson Xavier: "நா முத்துக்குமாரின் குரல் வடிவமாகத்தான், எனக்கு தெரிந்திருந்தார் கேகே."
திகழ் திரு அம்மா: "நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் ஷ்ரேயா வெர்சனை விட கேகே வெர்சன் தான் ரொம்ப fav.. ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்.... A big silence.. என்றே வாழ்கிறேன்... Awesome singer"
விஜய்: "Ripkk காலைல பாத்ததும் எந்த கேகே வடா சொல்றீங்க… கண்டிப்பா சிங்கர் கேகேவா இருக்காது நைட்டு தான பாட்டு கேட்டுட்டு படுத்தோம்ன்னு ஏதோ என்கூட இருந்த மாதிரி நினைச்சிட்டேன்.. நிஜமாவே சிங்கர் கேகேன்னதும் ஒரு மாதிரி ஆச்சி கண்ணு கலங்கிருச்சு..."
suguna: "மனம் கவர்ந்த பல பாடல்களை கொடுத்தவர் #RIPKK #கேகே , 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்’, 'உயிரின் உயிரே’, 'நினைத்து நினைத்து பார்த்தேன்’, 'காதல் வளர்த்தேன்’, 'ஒல்லிகுச்சி உடம்புகாரி’, 'அண்டங்காக்கா கொண்டக்காரி’, அப்படிப்போடு போடு’"
Vivekbharathi:
"நானும்
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
என் அன்றாட பாட்டுப் பட்டியலை
நிறைத்ததெல்லாம் உன் குரல்தான்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
கேகே!"
வாசிக்க > இவற்றைப் பாடியது நீங்கள்தானா? - கேகே... உங்களைக் கொண்டாட மறந்ததற்கு மன்னியுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT