நேரடியாக ஓடிடியில் வெளியாகும்  சாணிக் காயிதம்


நேரடியாக ஓடிடியில் வெளியாகும்  சாணிக் காயிதம்

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் 'சாணிக் காயிதம்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

‘ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இன்னும் வெளியாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது.

இதற்கு முன்பாகவே ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் அருண். கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானாலும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கரோனா நெருக்கடியால் தடைபட்ட இந்தப் படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன,

இந்நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் 'சாணிக் காயிதம்' திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தின் உரிமையை பெரும் தொகைக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இறுதிகட்ட பணிகளுக்குப் பிறகு விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x