சந்தானத்தின் 'டிக்கிலோனா' வெளியீடு தேதி அறிவிப்பு


சந்தானத்தின் 'டிக்கிலோனா' வெளியீடு தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்கிலோனா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ளார். இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்காகக் காத்திருந்தது படக்குழு. கரோனா நெருக்கடியால் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு எப்போது என்பது தெரியாமல் உள்ள நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.

முன்னதாகப் படம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் வெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படவில்லை. தற்போது 'டிக்கிலோனா' செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் என்று ஜீ5 ஓடிடி தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கால இயந்திரத்தால் உருவாகும் பிரச்சினைகளை வைத்து காமெடியாக இந்தப் படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x