சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்கிலோனா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ளார். இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். டைம் மிஷினை வைத்து உருவாகும் பிரச்சினைகளை வைத்து காமெடியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்காகக் காத்திருந்தது படக்குழு. தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு எப்போது என்பது தெரியாமல் உள்ளது. இதனால் 'டிக்கிலோனா' படக்குழுவினர் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் 'டிக்கிலோனா' வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
WRITE A COMMENT