ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஐங்கரன்'. இந்தப் படத்தை கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து நீண்ட மாதங்களாகின்றன. கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே பணிகள் முடிவடைந்துவிட்டாலும், பைனான்ஸ் சிக்கலால் படம் வெளியாகாமல் இருந்தது. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
தற்போது பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் 'ஐங்கரன்' படமும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை வெளியிட சோனி லைவ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
WRITE A COMMENT