Published : 02 Nov 2015 09:16 AM
Last Updated : 02 Nov 2015 09:16 AM
புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 2) துவங்கியது.
'ரஜினிமுருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கும் இப்படத்தை ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் புகைப்பட நிபுணர் வெங்கட்ராம் செய்தார். படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் தொடங்கும் என படக்குழு சார்ப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று முதல் பாடல் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படப்பிடிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். ராஜுசுந்தரம் நடனம் அமைத்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.பிப்ரவரி 2016 வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT