Published : 03 Oct 2015 07:57 AM
Last Updated : 03 Oct 2015 07:57 AM
நீதிமன்றத்தில் சட்ட சிக்கலில் மாட்டியி ருக்கும் நடிகர் சங்க நிலத்தை மீட்போம் என்று பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக் கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான ‘பாண் டவர் அணி’யும் போட்டியிடுகின்றன. இதில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், பொரு ளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
துணை தலைவர் பதவிக்கு போட்டி யிடும் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஸ்ரீமன், பிரசன்னா, சங்கீதா, கோவை சரளா உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு நேற்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அந்த அணியினரின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சிவகுமார், பாக்யராஜ், சத்யராஜ், வடிவேலு, ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, விமல், சூரி உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.
பாண்டவர் அணியின் தேர்தல் அறிக் கையை சிவக்குமார் வெளியிட நடிகை சச்சு மற்றும் மதுரை வசந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
நீதிமன்றத்தில் சட்ட சிக்கலில் மாட்டி யிருக்கும் சங்க நிலத்தை மீட்டெடுப் போம். செயற்குழு, பொதுக்குழு ஒப்புத லோடு எஸ்பிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்து நமது நிலத்தை நமதாக்குவோம். பாண்டவர் அணி சார்பில் உடனடியாக ஒரு திரைப்படம் எடுத்து நடிகர் சங்கத்துக்கு நன் கொடை வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை நடந்த கூட்டத்தில் திரையுலக பிரபலங்கள் சிலர் பேசியதாவது:
சிவகுமார்:
நான் 1965-ல் சினிமாவுக்கு வரும்போது நடிகர் சங்க இடத்தில் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. 10 அடிக்கு 10 அடி இடம்தான். அதில் என்.எஸ்.கிருஷ்ணன் படம் இருந்தது. அதுதான் அப்போது அடையாளம். அந்த இடத்தில் முக்கிய நாடக நடிகர்கள் பலரும் நாடகம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து கண்டுபிடித்ததுதான் இந்த நடிகர் சங்கம். அதை மீண்டும் கண்டுபிடியுங்கள்.
வடிவேலு:
எல்லாருக்கும் நல்லது செய்யறேன்னு இங்கே இவ்வளவு பேர் இருக்காங்க. இவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். நமக்கு நல்லது நடக்கணும். அதுக்கு இவங்க இருக்காங்க. கண்டிப்பா ஜெயிப்பாங்க.
பாக்யராஜ்:
சிவாஜி சார் ஒருமுறை ஓட்டுப்போட போன போது அவருக்கு பதிலா இன்னொருத்தர் ஓட்டுப் போட்டுட்டதா சொன்னாங்க. அது ஏதோ விளையாட்டுக்குத்தான் சொல்றாங்கன்னு இருந்தேன். நானே ஒரு முறை ஓட்டுப்போட முடியா மல் இருந்திருக்கேன். இப்படி முறைகேடுகள் எல்லாம் நடக்காம பார்த்துக்குவோம்.
ஜெயம் ரவி:
இளைஞர்கள் நாங்கள் வந்துவிட்டாலும், எங்களுக்கு முக்கிய ஆதரவு பெரியவங்கதான். அவங்க எல்லாரும் எங்க பின்னால இருக்காங்க. நடிகர்களுக்காக ஆரம்பித்த இந்த அணி வெற்றி பெறும்.
ராதாரவி, சிம்பு வேட்பு மனு தாக்கல்
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டி யிடும் ராதாரவி, சிம்பு ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலை மையிலான அணியும், பாண்டவர் அணியும் போட்டி யிடுகின்றன. இதில் சரத்குமார் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிம்பு, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நளினி, கே.ராஜன். டி.பி.கஜேந்திரன், எஸ்.என்.பார்வதி, ராம்கி, ஆர்.ரவிக்குமார், மோகன்ராம். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட 18 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT