Published : 12 May 2014 09:56 AM
Last Updated : 12 May 2014 09:56 AM

கேயாருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நிறைவேறியது

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தின் பொதுக்குழு கூட்டத்தில் கேயார் அணிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறை வேறியுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி சண்முகம் முன்னிலை யில் ஞாயிற்றுக்கிழமை சென்னை யில் நடந்தது. இதில் தயாரிப் பாளர் சங்கத்தலைவர் கேயார் அணிக்கு எதிராக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த செப்டம்பரில் தேர் தல் நடந்தது. இத்தேர்தலில் கேயார் அணியினர் வெற்றி பெற் றனர். கேயாரை எதிர்த்து போட்டியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சங்கச் செயல்பாடு களில் தொடர்ந்து கேயார் அணியினருக்கும், தாணு அணியினருக்கும் இடையே வாக்கு வாதங்களும், மோதல்களும் நடந்துவந்தன.

இந்நிலையில் முன்னாள் நீதி பதி சண்முகம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை யில்லா தீர்மான கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடந் தது. பதிவான வாக்குகள் மாலை யில் எண்ணப்பட்டன. பதிவான 449 வாக்குகளில் கேயார் அணிக்கு எதிராக 261 வாக்குகளும், ஆதரவாக 186 வாக்குகளும் பதிவானது. 2 ஓட்டுகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கேயார் அணிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது.

இந்த பொதுக்குழு கூட்டம் குறித்து பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சண்முகம், ‘‘அமைதியாகவும், முறையாகவும் பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. இந்த தீர்மான விவரங் களை 10 நாட்களுக்குள் உயர்நீதி மன்றத்தில் அளிப்பேன். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உயர்நீதி மன்றம் முடிவு செய்யும்’’ என்றார்.

பொதுக்குழு குறித்து ‘தி இந்து’ நிருபரிடம் கலைப்புலி தாணு கூறுகையில், “நியாயம், தர்மம், நீதிக்கு கிடைத்த வெற்றி இது. அடுத்த கட்டமாக நீதிமன்றத்தின் வழிகாட்டு தலோடு விரைவில் தேர்தல் நடக் ‑கும்” என்றார்.

கேயார் கூறுகையில், “நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த முறையே தவறு. நான் வெற்றி பெற்றபோது 449 வாக்குகள் பெற்றுள்ளேன். இப்போது மொத்தமே 447 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அதில் 186 வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. இது சிம்பிள் மெஜாரிட்டியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். இதுகுறித்து நீதிமன்றத்தில் முன்பே பேசியும் உள்ளோம். ஆகவே, நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x