Published : 14 Sep 2015 08:00 PM
Last Updated : 14 Sep 2015 08:00 PM
நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமார் அணியில் நடிகர் சிம்பு உப தலைவராகப் போட்டி யிடுகிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணி யினரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி என் மீது தொடர்ந்து பல குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு வரு கின்றன. இந்நிலை நீடித்தால் பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும். படங்கள் வெளி யிடுவதில் பிரச்சினை என்றாலும், நடிகர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், நடிகர் சங்கத் தலைவர் என்கிற முறையில் பல பிரச்சினை களைத் தீர்ப்பதில் முழு ஈடுபாட் டோடு செயல்பட்டுள்ளேன்.
நடிகர் சங்கக் கட்டிடம் 2013லேயே கட்டி முடிக்கப்பட் டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றிருந்தால், நலிவுற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் இன்று பலன் அடைந்தி ருப்பார்கள். இவ்வாறு சரத் குமார் பேசினார்.
உப தலைவர் பதவிக்கு சிம்பு
சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு உபதலைவர் பதவிக்கு போட்டி யிடுவதாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளர் பேட்டி யின்போது சிம்பு கூறிய தாவது:
நான் டி.ஆரோட பையன் என் பதைத் தாண்டி ஒரு சிறந்த மனித னாக இருக்கவே விரும்புகி றேன். ஆரம்பம் முதற்கொண்டே நடிகர் சங்கத்தின் செயல்பாடு களைப் பார்த்து வருகிறேன். இந்த அணிக்கு நான் ஏன் வந்துள்ளேன் என்றால் இந்த அணியில்தான் உண்மை உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதா ரவி உள்ளிட்டோரின் செயல்பாடு களைப் பார்த்து அவர்களின் அணியில் சேர்ந்துள்ளேன். நடி கர்களுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமையை இழந்துவிடக்கூடாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT