Published : 26 Aug 2015 08:04 AM
Last Updated : 26 Aug 2015 08:04 AM
இந்த தீபாவளிக்கு புது ரிலீஸ் படங்கள் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரத் தில் கூறப்படுகிறது. சினிமா தயாரிப் பாளர்களின் பிரச்சினைகள், சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்ளும் வகையில், அக்டோபர் மாதக் கடைசியில் இருந்தே புதுப் படங்கள் வெளியிடுவதை நிறுத்திவைக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் பிரச் சினை, க்யூப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 6 மாதங்களில் வெளியான படங்களைப் பொருத்தவரை, ‘காஞ்சனா’, ‘பாகுபலி’ ஆகிய 2 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்ததாக கூறப் படுகிறது. படத் தயாரிப்புக்கு ஆகும் செலவு, நடிகர்களின் சம்பள உயர்வு, விளம்பரச் செலவு என தொடர்ச்சி யாக சிக்கித் தவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ஒரு படம் வெளியாகும்போது, ‘4 காட்சிகள்’, ‘மதியம் 2:30 மணி காட்சி மட்டும்’ என்று திரையரங்குகளில் விளம் பரப்படுத்துகிறார்கள். ஆனால், சில திரையரங்குகளில் அந்த நேரத்துக்கு போனால் வேறு படம் ஓடிக்கொண்டி ருப்பதாக கொந்தளிக்கின்றனர் தயா ரிப்பாளர்கள். அது மட்டுமன்றி, பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால், சிறு முதலீட்டு படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அக்டோபர் மாத இறுதியில் இருந்து, புதுப்படங்கள் வெளியீட்டை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர் சங்கம் திட்ட மிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர். சங்கத்தின் இந்த முடிவை விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரிவிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் படத் தயாரிப்பு முறையை மாற்றி சீரமைப்பது சம்பந்த மாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருப்பதாவது:
எவ்வளவு சரியாக திட்டமிட்டாலும், தயாரிப்பாளர்களே நஷ்டம் அடைகின்ற னர். இதற்கான காரணங்கள்:
எந்த வங்கியும் திரைப்பட தயாரிப் புக்கு கடன் வழங்குவதில்லை. இதனால், பைனான்சியர்களிடம் தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி, அதிக வட்டியுடன் திருப்பித் தரவேண்டியுள்ளது. இதனால் பைனான்சியர்களுக்கு எந்த சிக்கலும் வருவதில்லை. தாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் அவர்கள் வருமானம் பெறுகின்றனர்.
படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பணத்தை பைசல் செய்யாவிட்டால் படம் வெளியாகாது. சேட்டிலைட் உரிமை வாங்கப்படவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு இது பெரிய நிதிச்சுமையாக மாறுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல ‘அவுட் ரைட்’ முறையில் இப்போது திரைப்படம் வாங்கப்படுவதில்லை. அதுவும் ஒரு காரணம்.
படம் விற்கப்படுகிறதோ, இல் லையோ, அனைத்து நிதிச் சுமை யையும் தயாரிப்பாளர் ஏற்க வேண் டும். எல்லா தரப்புக்கும் பணத்தை தந்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்.
இதில் எந்த நிலையிலும் தயாரிப் பாளர் தவிர மற்ற அனைவருக்கும் லாபமே. தொடர்ந்து நஷ்டம் அடை யும் பட்சத்தில் நாட்டில் உள்ள சில விவசாயிகளின் கதிதான் தயாரிப் பாளர்களுக்கும் நேருகிறது.
இந்நிலையை மாற்ற தயாரிப்பு செலவை 50 சதவீதமாவது குறைக்க வேண்டும். இதுதவிர, மற்ற தீர்வுகளும் உள்ளன.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திரையுலகை சேர்ந்த அனைவரும் உட்கார்ந்து, படத்தயா ரிப்பு முறைகளை மாற்ற வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT