Published : 17 Aug 2015 02:08 PM
Last Updated : 17 Aug 2015 02:08 PM
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வட சென்னை' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்' இணையான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தனுஷ், பார்த்திபன் உள்ளிட்டவர்களை வைத்து சில காட்சிகளை காட்சிப்படுத்தினார்வெற்றிமாறன். படத்தின் தலைப்பாக 'சூதாடி' என்று பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு முன்னர் சிம்புவை நாயகனாக வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த 'வட சென்னை' படத்தை தற்போது தனுஷை வைத்து மீண்டும் துவங்க இருக்கிறார். சமந்தா நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். தனுஷை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காட்ட இருக்கிறார்களாம். மேலும், தனுஷ் பாத்திரத்தின் 30 ஆண்டுகள் வளர்ச்சியை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு நீண்ட நாட்களாகும் என்பதால் பிரபுசாலமன் மற்றும் துரை.செந்தில்குமார் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்தில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்த 'கேங்ஸ் ஆஃப் வாஸபீர்' பட வரிசை பாணியின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே, வட சென்னை படத்தை இரு பாகங்களாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT