Published : 18 Aug 2015 08:21 AM
Last Updated : 18 Aug 2015 08:21 AM

‘பாகுபலி’ படத்தில் ஆட்சேபகரமான வசனத்தை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு

‘பாகுபலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்சேபகரமான வசனத்தை நீக்குமாறு படத்தின் இயக்குநருக்கு உத்தரவிட்டிருப்பதாக மத்திய தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக ஆதித்தமிழர் கட்சி அமைப்பு செயலர் சு.க.சங்கர், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.ஜக்கையன், தமிழ்ப் புலிகள் அமைப்பு பொதுச் செயலர் பேரறிவாளன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

பாகுபலி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வரிகளை கதாநாயகன் கூறியுள்ளார். இந்த வசனம் அருந்ததியர்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே, வசனகர்த்தா மதன்கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, தயாரிப் பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய வேண்டும். பகடை எனும் சொல்லை நீக்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு, மாவட்ட ஆட்சியர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த ஆட்சேபகரமான வசனத்தை நீக்குமாறு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வசனத்தை நீக்காவிட்டால், திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை நாளைக்கு (ஆக. 19) ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x