Published : 15 Jul 2015 09:43 AM
Last Updated : 15 Jul 2015 09:43 AM
எம்.எஸ்.வி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியதாவது:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
இசை உலகத்துக்கும், கலை உலகத்துக்கும் பெரிய இழப்பு. சிறி யவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக பழகக்கூடியவர். பழம்பெரும் இசையமைப்பாளர் எம்எஸ்வி-யின் இழப்புக்கு திமுக சார்பிலும், கலைஞர் சார்பிலும் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ்த் திரையுலகில் வரலாறு படைத்து, மேற்கத்திய இசையை தமிழ் இசையுடன் கலந்து, திரைப் படங்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எம்எஸ்வி. பாமர ரும் இசையை விரும்பிக் கேட்க வைத்த இசை உலகின் மாமேதை. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம் செய்து 1,200 படங்களுக்கு மேல் இசையமைத் துள்ளார். அவர் இயற்கை எய்தி னார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி யும், வேதனையும் அடைந்தேன். இது ஈடுசெய்ய முடியாத இழப்பு.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களுக்கு இசையமைத்து வரலாறு படைத்த மெல்லிசை மன் னர் எம்எஸ்வி மறைந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். ராமமூர்த்தியுடன் இணைந்து தமிழ் திரைப்படங்களுக்கு இசை யமைத்து முத்திரை பதித்தவர். தமிழ் திரைப்பட பாடல்கள் உள்ள வரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
திரை இசையுலகில் அன்றும், இன்றும், என்றும் மறக்க முடியாத வர் எம்எஸ்வி. கலையுலகில் நடிக ராகவும், பாடகராகவும் தனது முத்திரையை பதித்தவர். அவரது இழப்பு திரையுலகுக்கு மட்டு மல்ல, தமிழகத்துக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பு.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
இசை உலகின் சிகரமாக எம்.எஸ்.விஸ்வநாதன் உயர்ந்து நிற்கிறார். எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்களுக்கு அவர் இசையமைத்துத் தந்த பாடல் கள் காலத்தால் அழியாதவை. மண்ணுலகை விட்டு மறைந் தாலும், என் போன்றோருக்கு எந்நாளும் அவர் அருகில்தான் இருக்கின்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
13 வயதில் இசைக் கச்சேரி நடத்த தொடங்கியது முதல் இறுதிநாள் வரை தனது வாழ்வை இசைக்கு என்றே அர்ப்பணித்தவர் எம்எஸ்வி. சிறந்த பாடகராக, குணச்சித்திர நடிகராக கலைத் தாய்க்கு அவர் ஆற்றிய பணிகள் காலம் கடந்து நிற்பவை.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
திரை இசைக்கு உயிரூட்டியவர் உயிர் துறந்து படுத்திருப்பதை பார்த்து நெஞ்சம் பதைபதைக் கிறது. பன்மொழியாளராக இருந்தும் தமிழ் திரை இசைக்கு அவர் ஆற்றிய பணி என்றும் மறக்க முடியாது. எம்எஸ்வி மறைந்தாலும் அவரது இசை நம் அனைவர் நெஞ்சிலும் நிரந்தரமாக நிறைந்திருக்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
திரை இசையில் எண்ணற்ற புதுமைகளை படைத்தவர். தனது இசையால் தமிழக மக்களை கட்டிப்போட்டவர். வீரம், காதல், சோகம் என எந்த வகை பாடலாக இருந்தாலும் அதற்கேற்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்துவதுதான் அவரது இசையின் மகத்துவம். அவரது திறமை மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரது இசையில் உருவான பாடல்கள் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தன. அரசாங்கம் இவரது சாதனைகளை அங்கீகரிக்காதது வருத்தம் அளிக்கிறது.
தி.க. தலைவர் கி.வீரமணி
உடலுக்குதான் மறைவே தவிர, எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குரலும் இசை உலகத்தில் நிகழ்த்திய சாதனைகளும் எப்போதும் வாழும். அதற்கு ஒருபோதும் மரணமில்லை. அவரது குடும்பத்தினருக்கும், கலைக் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
இசைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரது மறைவு தமிழகத்துக்கும், இந்திய இசை உலகுக்கும் பேரிழப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
தமிழ் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு இசை அமைத்ததோடு சொந்தக் குரலில் பாடியும், நடித்தும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்தியவர் எம்எஸ்வி. அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் ந.சேதுராமன், கொங்குநாடு ஜனநாயக கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் ஆகியோரும் எம்எஸ்வி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT