Published : 21 May 2014 11:10 AM
Last Updated : 21 May 2014 11:10 AM

வளரும் படங்கள்

8 எம்.எம்

ஒரு படம் வெற்றிகரமாக ஓட முன்னணி நடிகர்களை விட கதைதான் முக்கியம் என்ற நம்பிக்கையில் உருவாகியிருக்கும் படம் ‘8 எம்.எம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய்,தமிழ் மொழிகளில் 12 படங்கள் இயக்கியுள்ளார்.

‘8எம்.எம்’ படம் குறித்து நம்மிடம் கூறிய இயக்குநர் அமீன், “இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். தமிழ் திரையுலகின் வழக் கமான பல விஷயங்களை தகர்த்து இப்படம் உருவாகியிருக்கிறது.வெளிநாட் டிலிருந்து இந்தியா வரும் ஒரு காதல் ஜோடி, மலைப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறது. அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், திடீர் திருப்பங் கள் ஆகியவற்றை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்” என்கிறார்.

சூர்யா நடித்த ‘ஸ்ரீ படத்துக்கு இசை யமைத்த முரளி, இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

பகடை... பகடை..

‘பேரழகன்’ படத்தில் சூர்யாவை வித்தியாச மான வேடத்தில் நடிக்க வைத்தவர் சசிசங்கர். அப்படத்திற்கு பிறகு திலீப் குமார் என்பவரை நாயகனாக்கி ‘பகடை.. பகடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சசிசங்கர். திவ்யாசிங் நாயகி யாக நடிக்கும் இப்படத்தில் அவரது தங்கையான ரிச்சுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தைக் குறித்து நம்மிடம் பேசிய இயக்குநர் சசிசங்கர், “பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் அக் ஷன் கலந்து சொல்லி இருக்கிறோம். பகடைக்காய் மாதிரி பணம் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக் கிறது என்பதைத்தான் இதில் பதிவு செய்கி றோம். இந்த கதாபாத்திரத்திற்கு திலீப் குமார் ஏகப் பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். காதல், காமெடி, ஆக் ஷன் என்று எல்லாம் கலந்த படம் இது” என்றார்.

உள்ளேன் ஐயா

பள்ளி மாணவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘உள்ளேன் ஐயா’. இப்படத்தை இயக்குநர் விஜய பாஸ்கர் இயக்குகிறார். கிங் டேவிட் என்ற ஆஸ்திரேலிய படத்தொகுப் பாளர் இப்படத்தில் பணியாற்றி இருக் கிறார். ஜெயபாலன் என்ற மலையாள ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருக் கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் விஜய பாஸ்கர் கூறுகையில், “10 வயதுக்குள் இருக்கும் பசங்களை வைத்து இப் படத்தை இயக்கி வருகிறேன். நீங்கள் இதுவரை வெள்ளித்திரையில் பார்த்த எந்த ஒரு நடிகரையும் இப்படத்தில் பார்க்க முடியாது. முக்கிய வேடம் உட்பட பல வேடங்களில் சுமார் 100 சிறுவர்களை நடிக்க வைத்துள்ளேன். அதோடு பள்ளி ஆசிரியர்களாக நிஜ ஆசிரியர்களையே நடிக்கவைத்துள்ளேன்.

கிராமப்புறங்களில் சில மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விடுகிறார்கள். அப்படி அவர்கள் பள்ளியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அலசுவது தான் படத்தின் மையக் கரு. இப்படத்தை முழுக்க முழுக்க புதுச்சேரியில் 25 நாட்கள் படமாக்கினேன். இப்படம் இந்தி யன் பனோரமாவில் தேர்வாகி சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரை யிடப்பட்டுள்ளது. விரைவில் தமிழ் நாட்டில் இப்படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

மனம் மயங்குதே

‘ராட்டினம்’ நாயகன் லகுபரன், ரியா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரது நடிப் பில் உருவாகி இருக்கும் படம் ‘மனம் மயங் குதே’. கருமாரி நிறுவனம் தயாரிக் கும் இப்படத்தின் பாடல்களுக்கான இசையை பவனும், பின்னணி இசையை ஷியாம் மோகனும் அமைக்கிறார்கள்.

இப்படம் குறித்து அதன் இயக்குநர் ராஜீவ் கூறுகையில், “துன்பம் வரும் வேளையில் நாம் எடுக்கும் முடிவுதான் நம் வாழ்வின் நிலையை நிர்ணயிக்கும். நமக்கு என்றாவது கஷ்டம் வரும்போது நாம் எடுக்கும் முடிவுதான் நம் வாழ்க் கையைத் தீர்மானிக்கிறது. இந்த படத்தின் நாயகன் ஒரு ‘கொரியர்’பாயாக வேலை பார்க்கி றார். அவருக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவர் எடுக்கும் முடிவு அவரது வாழ்க்கையை எப் படி திசை திருப்புகிறது என் பதுதான் படத்தின் கதை.

படத்தின் தலைப்பை பார்த்ததும் இது காதல் கதையோ என்று தோன்றும். ஆனால், அதைத் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x