Published : 25 May 2014 09:18 AM
Last Updated : 25 May 2014 09:18 AM
வீரத்தாலும் ராஜ தந்திரத்தாலும் ராஜ்ஜியங்களைக் கவிழ்க்கும் ஒரு படைத்தளபதியின் பழிவாங்கும் படலம்தான் ‘கோச்சடையான்’. இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்கத் தொழில்நுட்பம் (மோஷன் / பெர்ஃபார்மென்ஸ் கேப்சர்) என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரஜினியைப் பார்த்ததும் ரசிகர்கள் எந்த மனநிலைக்குச் செல் லப்போகிறார்களோ என்கிற ஆவல் படம் தொடங்கியதும் இருக்கவே செய்கிறது.
கோட்டைப்பட்டினம் - கலிங்கபுரி இரு நாட்டின் அரசர்களுக்கு இடையே நடக்கும் ராஜாங்கப் போட்டி தான் படத்தின் கதை. வீரமும் கூர்மை யான அறிவும் கொண்ட ராணாவைத் தனது தளபதியாக கலிங்கபுரி மன்னர் நியமிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. கலிங்கபுரியில் அடிமைகளாக இருக்கும் கோட்டைப்பட்டினத்துப் போர் வீரர்களை மீட்டு, கோட்டைப் பட்டினத்திற்கு அழைத்துவருகிறான் ராணா. கோட்டைப்பட்டினத்துத் தள பதியாக நியமிக்கப்படும் அவனுக்கு மறைமுகமான செயல்திட்டம் ஒன்று இருக்கிறது. அவன் அப்பா கோச்ச டையானின் வரலாற்றில் அதற்கான ரகசியம் இருக்கிறது.
தந்தைக்காகப் பழிவாங்குவது, கலிங்கபுரியின் படையெடுப்பிலிருந்து கோட்டைப்பட்டினத்தைக் காப்பாற்று வது, கோட்டைப்பட்டினத்து மன்னர் ராஜகோடகனின் (நாசர்) எதிர்ப்பை மீறி இளவரசி வதனாவை (தீபிகா படுகோன்) கரம் பிடிப்பது ஆகிய சவால்களை ராணா எப்படிக் கையாள்கிறான் என்பதுதான் இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனைக் களத் தின் கதை. இடையில் கோச்சடை யானின் பின்கதையும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) ராணாவின் தங்கை (ருக்மிணி) காதல் என்னும் கிளைக்கதையும் உண்டு.
மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் படத்தை உருவாக்க சௌந்தர்யா ரஜனிகாந்தின் முயற்சியைப் தான் பாராட்டலாம். ஆனால் அது மெச்சத்தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை. எந்தக் கதாபாத்திரத்தின் கண் அசைவுகளும், உடல் அசைவுகளும் திரையில் பொருந்தவில்லை. குறிப்பாக சரத்குமாரின் குரலைக் கேட்டுத் தான் அவரை அடையாளம் தெரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி கதாபாத்திரத்தை உருவாக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட மற்றெந்தக் கதாபாத்திரங்களுக்கும் கொடுக்கப்படவில்லை.
கதையும் திரைக்கதையும் பார்வையாளர்களை உட்கார வைக்கின்றன. அம்புலிமாமா பாணிக் கதைதான் என்றாலும் ரஜினியின் இமேஜுக்கு ஏற்ப அதை வடிவமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது. ரஜினியின் முத்தி ரையான ஸ்டைலை இயக்குநர் சவுந்தர்யா நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிக் குமாரின் வசனம் படத்திற்கு ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. ‘வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக் கொள்ள வேண்டும்’, ‘எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு; முதல் வழி மன்னிப்பு’ இப்படியான வசனங்கள் ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் உள்ளது.
திரையில் வரும் கதாபாத்திரங்களின் முக பாவங்களுக்குத் தொழில் நுட்பமே பொறுப்பு பெருமளவில் என்பதால் நடிப்பைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. உடல் மொழிகளைக் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றாலும் பல சமயங் களில் அது செயற்கையாகவே தெரி கிறது. ரஜினியின் குரலும் நாசரின் குரலும் சிறப்பாக நடித்திருக்கின்றன.
‘ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையை அற்புதமாகக் கொடுத்திருந்திருக்கிறார். பாடல்களும் நன்றாக உள்ளன. ஆனால், படத்தில் தேவையில்லாமல் பாடல்கள் வருவதும், பாடல்களுக்கு கதாபாத்திரங்களின் நடன அசைவுகளும் உதடு அசைவுக ளும் பொருந்தாமல் இருப்பதும் அயர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தில் கோச்சடையானின் நடனம் மட்டுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், ஷோபனா, தீபிகா, ருக் மணி என நாட்டியத்திற்குப் புகழ் பெற்ற நடிகைகளின் நடனத்திற்கு இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி யிருக்கலாம். ரஜினி படத்திற்கு இருக்கும் ‘மாஸ்’ வரவேற்பை மோஷன் கேப்சர் மூலம் கொண்டுவரத் தவறி இருக்கிறார்கள்.
படத்தில் நாகேஷை லைவ் கதாபாத் திரமாக கொண்டு வந்திருக்கும் யோசனையை நிச்சயம் பாராட்டலாம். அவருக்கு அழகாக டப்பிங் கொடுத்து அவருக்கே உரிய காமெடித்தனத்தை பிரதிபலிக்கச்செய்ததற்காக யூனிட் டிற்கு ஒரு சல்யூட்.
பிற்காலத்தில் எந்த ஒரு கலைஞனையும் நாம் கற்பனை ரசவாதத்திற்குள் அழகாக உருவம் கொடுத்து சினிமாவாக்க முடியும் என்கிற முயற்சியை இதன் மூலம் விதைத்திருகிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் இந்த தொழில்நுட்ப வடிவத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT