Published : 09 May 2014 08:50 AM
Last Updated : 09 May 2014 08:50 AM
நடிகர் ரஜினிகாந்த்- நடித்துள்ள 'கோச்சடையான்' வெளியாவது தள்ளிப்போனதால், கர்நாடகாவில் 'கோச்சடையான்' டிக்கெட் முன் பதிவு செய்திருந்த லட்சக் கணக் கானவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர் களுக்கும், தியேட்டர் உரிமை யாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பட ரிலீஸுக்காக பல லட்ச ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப் பட்ட கட்- அவுட்,மாலை,விளம்பர பேனர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என அனைத்தும் வீணா கியிருப்பதால், அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
'கோச்சடையான்' திரைப்படம் உலகம் முழுவதும் வெள்ளிக் கிழமை (மே 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியும் பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
பல லட்ச ரூபாய் நஷ்டம்
இது தொடர்பாக கர்நாடக ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி முருகனிடம் பேசினோம். “கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், ஷிமோகா மற்றும் பத்ராவதி ஆகிய இடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரையரங் கங்களில் 'கோச்சடையான்' வெளி யாகும் என அறிவிக்கப்பட்டது.பெங்களூரில் மட்டும் 25 திரை யரங்கங்களில் வெளியாவதாக இருந்தது.
எனவே பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றங் களின் சார்பாக கட்-அவுட், பிரமாண்ட மாலை,விளம்பர பதா கைகள், போஸ்டர்கள் மற்றும் அன்னதானம், இனிப்பு வழங்குதல் என பல வகையான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
ஸ்ரீராமபுரம் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக பெங்களூர் முழுவதும் உள்ள ரஜினி கட் அவுட் களில் போடுவதற்காக 4 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட மாலைக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
எங்களுடைய அமைப்பின் சார்பாக ஊர்வசி தியேட்டர் அருகே, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு 1000 பேருக்கு பிரியாணி யும், லட்டும் வழங்க திட்டமிட்டு இருந்தோம். இதேபோல பல இடங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவளித்து பல வித மான ஏற்பாடுகளை செய் திருந்தோம்.
இப்போது படத்தின் ரிலீஸ் திடீரென 23-ஆம் தேதிக்கு தள்ளிப்போனதால் எல்லாமே வீணாகி விட்டது.அந்த வருத் தத்தை விட படம் ரிலீஸ் ஆகாமல் போனது மேலும் வருத்தத்தை கூட்டியிருக்கிறது''என்றார்.
முன்பதிவு பணம் திரும்ப கிடைக்குமா?
இதனிடையே பெங்களூரில் ஊர்வசி, பாலாஜி, முகுந்தா உள்ளிட்ட பல திரையரங்கங்களில், 'கோச்சடையான்' படத்திற்கு ரூ 200 முதல் ரூ 1000-வரை செலவிட்டு லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர்.
இப்போது படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிப்போனதால் முன் பதிவு பணம் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் திரையரங்கங்களை வியாழக் கிழமை மாலை முற்றுகையிட்டனர்.இதனால் தியேட்டர் உரிமையாளர் களுக்கும்,முன்பதிவு செய்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெங்களூர் ஊர்வசி திரையரங் கத்தில் இன்டர்நெர் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவர் களுக்கும், திரையரங்க உரிமை யாளருக்கும் இடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டது. சாதாரண கட்டணத்தை விட இன்டர்நெட் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய் தவர்களிடம் 10 சதவீதம் அதிக மாக வசூலிக்கப்பட்டது.
டிக்கெட் முன்பதிவு பணத்தை உடனடியாக வழங்குமாறு ரசிகர் கள் திரையரங்கத்தை முற்றுகை யிட்டனர். இதனால் அதிர்ச்சி யடைந்த திரையரங்க உரிமை யாளர்கள், “முன்பதிவு செய்த டிக்கெட் பணத்தை 15 நாட்களுக் குள் படிப்படியாக வழங்கு கிறோம்''என அறிவித்துள்ளனர்.
இதே நேரத்தில் இன்டெர் நெட்டில் முன்பதிவின்போது கூடுதலாக 10 சதவீத பணத்தை வசூலித்தவர்களுக்கு,அந்த 10 சதவீத பணத்தை வழங்க முடியாது''என தெரிவித்துள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந் துள்ளனர். இதன் மூலம் ரசிகர்களின் பல கோடி ரூபாய் பணம் குளறு படியில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT