Last Updated : 06 May, 2015 11:05 AM

 

Published : 06 May 2015 11:05 AM
Last Updated : 06 May 2015 11:05 AM

ஜூன் 11-ல் நடிகர் வித்தார்த் திருமணம்

ஜூன் 11ம் தேதி திருப்பதியில் நடிகர் வித்தார்த் - காயத்ரி தேவி திருமணம் நடைபெற இருக்கிறது.

'மின்னலே', 'சண்டைக்கோழி', 'லீ', 'குருவி' போன்ற படங்களில் துணை நடிகராக தனது திரையுலக பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் வித்தார்த். பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

'முதல் இடம்', 'கொள்ளைக்காரன்', 'காடு' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது இவரது நடிப்பில் 'உலா', 'விழித்திரு' ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், வித்தார்த்துக்கும் காயத்ரி தேவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜூன் 11ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் ஜூன் 17ம் தேதி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x