Last Updated : 23 Jun, 2017 10:46 AM

 

Published : 23 Jun 2017 10:46 AM
Last Updated : 23 Jun 2017 10:46 AM

சிம்பு படத்தின் காலை காட்சிகள் ரத்து: 12 மணி காட்சிகள் வெளியாக வாய்ப்பு

சிம்பு நடிப்பில் வெளியாகவிருந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' இன்று(ஜூன் 23) வெளியாகவிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள். காலையில் திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

KDM எனப்படும் QUBE KEY வராததால், காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, "படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மட்டுமே பிரச்சினை எழுந்துள்ளது. காலை 10 மணிக்கு வங்கி திறந்தவுடன், QUBE பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு KDM அனைத்து திரையரங்குகளுக்கும் சென்றடையும்" என்று தெரிவித்தார்கள்.

மேலும், இப்பிரச்சினைகளை களைவதற்கு சிம்புவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்கள். இதனால் மதியம் 12 மணி காட்சியிலிருந்து படம் வெளியாகும் என தெரிகிறது.

'வனமகன்' படத்துக்கும் இதே போன்று பிரச்சினை ஏற்பட்டு, காலை 10 மணிக்கு தீர்க்கப்பட்டு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x