Last Updated : 19 Sep, 2013 06:38 PM

 

Published : 19 Sep 2013 06:38 PM
Last Updated : 19 Sep 2013 06:38 PM

காமெடி படங்களை குறைக்கப்போறேன்: சிவகார்த்திகேயன்

கிடுகிடுவென மலை ஏறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இரண்டே ஆண்டுகள்… எட்டாவது படமான ‘மான் கராத்தே’ ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ - வெற்றி ஏகத்துக்கும் தன் கிராஃபை உயர்த்திய சந்தோஷம் அவரது பேச்சிலேயே தெரிந்தது. கொஞ்சம் மழையும், கொஞ்சும் மாலையும் இணைந்த ஒரு வேளையில் ஒரு கப் கா்பியோடு அவரைச் சந்தித்துப் பேசினோம்.

காமெடி கேரக்டர்ல பரவலா ஹிட் ஆகிட்டீங்க. இனி, சூர்யா, விக்ரம், 555 பரத் (சிக்ஸ் பேக்) ஸ்டைல்ல உங்களையும் எதிர்பார்க்கலாமா?

"நிச்சயம் எதிர்பார்க்கலாம். காமெடி படங்கள்ல நடிக்கறதை நானே குறைச்சிக்கலாம்னு இருக்கேன். அதற்கான தொடக்கம்தான் மான் கராத்தே. அடுத்ததா தனுஷ் புரொடக்‌ஷன்ல, ‘எதிர் நீச்சல்’ டீமோட இணையப்போகிற படத்துலயும் வித்தியாசமான சிவகார்த்திகேயனைப் பார்க்கலாம். கேரக்டரைப் பார்க்கலாம்."

காலேஜ் பொண்ணுங்களோட செல்போன் வால்பேப்பர்ல உங்க படங்கள்தான் அதிகமாமே?

"என்னை ஒரு நண்பனா, சகோதரனா, பக்கத்துவீட்டு பையனா நினைக்கிறதுதான் இதுக்கு காரணம் (நம்பிட்டோம் பாஸ்!). என்னோட படத்துல இரட்டை அர்த்த வசனங்கள் வர்றதை முற்றிலும் தவிர்த்துடுறோம். கொஞ்சம் கொஞ்சம் கிண்டல் இருக்கும். மத்தபடி மனதை சங்கடப்படுத்துற வார்த்தைங்க இருக்காது. அதுல ரொம்பவே தெளிவா இருக்கோம்."

உங்க படத்தோட ஹீரோயின்களை நீங்கதான் செலக்ட் பண்றீங்களாமே?

"யாருங்க சொன்னது? அதுக்கெல்லாம் டைரக்‌ஷன், புரொடக்‌ஷன் டீம் இருக்கே. கதைகள்ல சிறந்த கதையை தேர்ந்தெடுக்கிறேன். அதுக்கு பொருத்தமான ஹீரோயினை டைரக்டர் தேர்ந்தெடுக்கிறார். ப்ரியா ஆனந்த், திவ்யா, ஹன்சிகா எல்லோரும் டைரக்டர் சாய்ஸ்தான்!"

சந்தானத்தோட எப்போ நடிப்பீங்க?

"தெரியலையே. நானும் சந்தானம் அண்ணனும் கமிட் ஆகக் கூடாதுனு எல்லாம் ஒண்ணும் இல்லை. கதை இன்னும் அமையலை. அவ்ளோதான்."

தமிழ் சினிமாவில் காமெடிப் படங்கள் வரிசை கட்டித் தொடர்வது ஆரோக்கியமான விஷயமா?

"காமெடிக்கு இதுதான் ட்ரெண்ட்னு இல்லை. வரிசை கட்டி வந்தாலும் எல்லா காமெடி படங்களும் ஜெயிக்கிறதில்ல. ஒரு சில படங்கள்தான் சக்ஸஸ் கொடுக்குது. அதுல மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க."

சிம்பு, யுவன், ப்ரேம்ஜி, வெங்கட் கூட்டணி போல தனுஷ், அனிருத்...சிவகார்த்திகேயன் கூட்டணியா?

"தனுஷும் அனிருத்தும் சின்ன வயசு முதலே நண்பர்கள். தனுஷோட 3 படத்துல நடிச்சப்போதான் நானும் அந்த வட்டத்துக்குள்ள இணைந்தேன். எல்லா நட்பும் பசுமையா துளிர்க்க எதிர்பார்ப்பைக் கடந்து உண்மையா பழகுறதும் காரணம். எங்க நட்பும் அப்படித்தான்."!

ஷூட்டிங், டப்பிங்னு பரபரப்பா இருக்கீங்க. குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியுதா?

"மாசத்துல 20 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். மத்த நேரம் எல்லாம் குடும்பம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x