Last Updated : 19 Oct, 2015 12:35 PM

 

Published : 19 Oct 2015 12:35 PM
Last Updated : 19 Oct 2015 12:35 PM

காழ்ப்புணர்ச்சி மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற சரத்குமார் பத்திரிகையாளர்களிடையே பேசியதாவது:

"ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது. நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. வெற்றி அடைந்தவுடன் "சரத் சார் உங்களுடைய உதவி தேவை" என்று நாசர் கூறினார். வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையில் சகஜம். தென்னிந்திய நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பயணித்துக் கொண்டிருப்பவன் நான்.

நடிகர் சங்க கட்டிடத்தை எப்படி கட்டப் போகிறோம் என்று எண்ண வேண்டும். கட்டிட ஒப்பந்தத்தை அவர்கள் படித்துபார்த்து, சிறந்த ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் போட்டிருக்கிறோம் என்று தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன். அவர்கள் கூறியிருப்பதைப் போல அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னால், பூச்சி முருகன் தனது வழக்கை வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெற்றவுடன் SPI சினிமாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நீதியரசர் பத்மநாபன் சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி தந்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் அணிக்கு எனது வாழ்த்துகள். எப்படி பயணிக்க வேண்டுமோ, என்ன எண்ணங்கள் இருக்கிறதோ அதை மீண்டும் பொதுக்குழுவில் பேசும்போது அனைவரின் ஆதரவும் கிடைக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு இருந்த காழ்ப்புணர்ச்சி எல்லாம் மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் சகோதரத்துவத்தை இழக்கின்ற சூழல் உருவாகி இருக்கிறது.

சங்கம் பிரிந்து ஒற்றுமையுடன் இருக்காதோ என்ற ஐயம் எல்லாம் இருந்தது. இதை நான் தோல்வியாக கருதவில்லை, அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று தான் கருத வேண்டும்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x