Last Updated : 15 Oct, 2014 02:38 PM

 

Published : 15 Oct 2014 02:38 PM
Last Updated : 15 Oct 2014 02:38 PM

எனது கோபம் நிஜம்: பப்லுவின் ஒப்புதலுக்கு சிம்பு பதில்

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ சர்ச்சை தொடர்பான பப்லுவின் விளக்கத்துக்கு, "எனது கோபம் நிஜம்" என்று பதில் கூறினார் சிம்பு.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார்.

அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள்.

"நானும் சிம்புவும் சண்டையிட்டது, பேசி வைத்து செய்த நாடகம்தான்" என்று நடிகர் பப்லு நீண்ட நாட்கள் கழித்து இந்த சர்ச்சைக்கு பதிலளித்தார்.

இது குறித்து நடிகர் சிம்புவிடம் கேட்டபோது, "அவரு பேசி வைச்சு பண்ணியிருக்கலாம். அவர்கிட்ட பேசி, இந்த மாதிரி சொல்லு அப்படினு சொன்னாங்களா என்று எனக்கு தெரியாது. அது அவரோட பெர்சனல். என்கிட்ட தொலைக்காட்சி தரப்பில் இருந்து அந்த மாதிரி எதுவுமே சொல்லவில்லை. அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், 'இந்த மாதிரி நடந்ததே... அதை போடட்டுமா?' அப்படினு கேட்டு தான் ஒளிபரப்பினாங்க. என்னோட கோபம் நிஜம். பப்லு ஏதாவது காமெடியாக சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்" என்று காட்டமாக கூறினார் சிம்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x