Published : 19 Oct 2014 05:14 PM
Last Updated : 19 Oct 2014 05:14 PM
சிறையில் இருந்து ஜாமீனில் விடு தலையான ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘ஜெயலலிதா ஜி, நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத் துக்கு திரும்பியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு இனிதான எதிர்காலம் அமைய பிரார்த் தனை செய்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன், அமைதியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எனது ஆதரவு, அன்பு, கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு. வாழ்வில் பல்வேறு கடினமான நிகழ்வுகளை சந்தித்துள்ளீர்கள். அவற்றை மிகவும் தைரியத்துடன், கட்டுப்பாட்டுடன் நீங்கள் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விரைவிலேயே நிர்வாக பொறுப்புக்கு திரும்புவீர்கள் என்று உறுதியாக தெரிவிக்கிறேன். உங்கள் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஏராளமான ஆதரவாளர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.
இருவரின் வாழ்த்துச் செய்திகளை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT